விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க பேரவைக் கூட்டம் நடந்தது. செயலாளர் அசோகன், நகர துணை தலைவர் யேசுராஜ் தலைமை வகித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. நகர தலைவராக மோகன், செயலராக பாலுசாமி, பொருளாளராக வெங்கடேசன் உள்பட, ஒன்பது பேர் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டனர். கந்துவட்டியை தடை செய்ய வேண்டும். விசைத்தறி தொழிலாளர்களுக்கு, மூன்று சென்ட் வீட்டு மனை வழங்க வேண்டும். பி.எப்., ஈ.எஸ்.ஐ., திட்டங்களை அமல்படுத்த வேண்டும். கோட்டைமேடு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். ஆனங்கூர் சாலை, அரசு மேல்நிலைப்பள்ளி சாலையை இணைக்கும் விதமாக, பள்ளி மாணவ, மாணவியர் எளிதில் சாலையை கடக்க, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை