நகராட்சி பள்ளியில் இதய நிறைவு தியான பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி பள்ளியில் இதய நிறைவு தியான பயிற்சி

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், நகராட்சி தொடக்கப்பள்ளியில், இதய நிறைவு தியான பயிற்சி நடந்தது. குமாரபாளையம், புத்தர் தெரு நகராட்சி தொடக்கப்பள்ளியில், இதய நிறைவு தியான பயிற்சி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வாசுதேவன் தலைமையில் நடந்தது. வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தியான பயிற்சியாளரும், ஈரோடு மண்டல, இதய நிறைவு தியான பயிற்சி மைய நிர்வாகியுமான ரமேஷ் பேசுகையில், ''தியான பயிற்சியால், மனம் ஆழ்ந்த அமைதி அடையும். உடல் நிலையில் முழுமையான ஓய்வு நிலையை பெற முடியும். இறைத்தன்மையை உணர முடியும், மனச்சிக்கல்கள் நீங்கி, எளிமையும், தூய்மையும் பெறலாம்,'' என்றார். தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி, நிர்வாகிகள் சந்திரன், சண்முகசுந்தரம், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை