கொத்தடிமையாக பணியாற்றிய கணவன், மனைவி மீட்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொத்தடிமையாக பணியாற்றிய கணவன், மனைவி மீட்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே, பெருமாபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன், 36. மனைவி சசிகலா, 29. இரண்டு குழந்தைகள் உள்ளனர். சின்னமுதலைப்பட்டி அருகே, செல்லிபாளையம் அருகே உள்ள தனியார் கோழிப்பண்ணையில் தங்கி வேலை செய்து வந்தனர். அங்கு சரியான ஊதியம், உணவு, விடுமுறை அளிக்காமல் கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர். இதுகுறித்து, ஈரோட்டில் உள்ள கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டுள்ள, ரீடு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சரவணன் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சப் - கலெக்டர் கிராந்திகுமார்பதிக்கு தகவல் தெரிவித்தார். அவர் தலைமையிலான அலுவலர்கள் அந்த கோழிப்பண்ணைக்கு நேரில் சென்று, தம்பதியினரை மீட்டனர். கோழிப்பண்ணை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய, சப்-கலெக்டர் போலீசாருக்கு உத்தரவிட்டார். விசாரணைக்கு பிறகு, 20 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்கி, இருவரும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை