'செலவுகளை குறைத்து வருகிறோம்': மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'செலவுகளை குறைத்து வருகிறோம்': மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாமக்கல்: ''மின்வாரியத்தில் செலவுகளை முடிந்த வரையில் குறைத்து வருகிறோம்,'' என, அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறினார்.
சமூக பாதுக்காப்பு திட்டம் சார்பில், 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 903 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி, 305 பயனாளிகளுக்கு மானிய விலையில், அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா, நாமக்கல்லில் நடந்தது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, 'தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது குறித்து, நிருபர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: இப்போது பணி இடமாறுதல் விண்ணப்பம் ஆன்லைனில் பெறப்பட்டு, நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது. காற்றலை மின் உற்பத்தி அதிகமாக இருப்பதால், அனல் மின் உற்பத்தியை குறைத்திருக்கிறோம். இதனால், நிலக்கரி தேவை குறைந்துள்ளது. இதுபோல் செலவுகளை முடிந்த வரையில் குறைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். கலெக்டர் ஆசியா மரியம், எம்.பி., சுந்தரம், எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஒன்றியங்களில், 327 பேருக்கு, மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் தலைமை வகித்தார். அமைச்சர் தங்கமணி, இரு சக்கர வாகனங்களையும், 633 பேருக்கு, 79 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், இரு ஒன்றியங்களிலும், பல்வேறு அரசு கட்டடங்களை திறந்து வைத்து, புதிய திட்டப்பணி பூமி பூஜையிலும் பங்கேற்றார்.

செயல் அலுவலரை கண்டித்த அமைச்சர்: ப.வேலூரில், நல்லியாம்பாளையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடத்தை, அமைச்சர் தங்கமணி நேற்று திறந்து வைத்தார். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் சிலர், கல்லூரி சாலை பகுதியில் குடிநீர் குழாய் கேட் வால்வு அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சிலர் மீது பொய் வழக்கு பதிந்துள்ளனர். அதை வாபஸ் பெறக்கோரியும், தங்கள் பகுதிக்கு தனியாக கேட்வால்வு அமைத்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து டவுன் பஞ்., செயல் அலுவலரை விசாரித்த அமைச்சர், மக்கள் நலன்கருதி பிரச்னையை விரைந்து முடிக்க வேண்டுமென, அவரை கண்டித்தார். உடனடியாக தீர்வு காண்பதாக, செயல் அலுவலர் ரவிக்குமார் அமைச்சரிடம் உறுதியளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X