வேலை வாய்ப்பு பதிவு; பள்ளிகளில் ஏற்பாடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலை வாய்ப்பு பதிவு; பள்ளிகளில் ஏற்பாடு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ், வரும், 16ல் வழங்கப்பட உள்ளது. அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே, வேலை வாய்ப்பு பதிவுப் பணியை மேற்கொள்ள, சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வேலை வாய்ப்பு இணையதளத்திலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகியும் பதிவு செய்யலாம். ஏற்கனவே, 10ம் வகுப்பு கல்வித்தகுதி பதிவு செய்திருப்பின், பதிவு அடையாள அட்டையுடன், மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று, தாங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி, பிளஸ் 2 தகுதியை பதிவு செய்து கொள்ளலாம். புதிதாக பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் ஆகிய விபரங்களுடன், சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவு மேற்கொள்ளலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை