விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: மொளசியில், விவசாயி வீட்டில் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் அருகே, மொளசி ராய்க்கால் வலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 55. நேற்று முன்தினம் காலை, வீட்டை பூட்டை விட்டு, ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து, வீட்டிற்கு வரும் போது, பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த இரண்டு பவுன் தங்கக் காசு, பணம் திருடு போயிருந்தது. மொளசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை