பள்ளிபாளையம் சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிபாளையம் சிக்னல் பயன்பாட்டிற்கு வருமா?

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், பஸ் நிறுத்தம் அருகே, நான்கு சாலை சந்திப்பில் உள்ள சிக்னல், மீண்டும் பயன்பாடின்றி உள்ளது. பள்ளிபாளையம், பஸ் நிறுத்தம் அருகே நான்கு சாலை சந்திப்பில், வாகன போக்குவரத்து அதிகம். அடிக்கடி போக்குவரத்து நெரிசல், விபத்து ஏற்பட்டதால், வாகனங்கள் சீராக செல்லும் வகையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் சிக்னல் அமைக்கப்பட்டது. சில நாட்கள் மட்டும் செயல்பட்டது. அதன்பிறகு பயன்பாடு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் பயன்பாட்டிற்கு வந்தது. வாகன ஓட்டிகள், மகிழ்ச்சியடைந்தனர். தற்போது மீண்டும் பயன்பாடின்றி உள்ளது. காலை, மாலையில், போலீசார் தான், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: சிக்னல் போட்டால் வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கின்றன. இதனால், சிரமம் ஏற்படுகிறது. தற்போது காத்திருக்கும் நேரம் குறைத்து, விரைவாக வாகனங்கள் செல்லும் வகையில் நேரம் அமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்து விடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X