ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் கூட்டணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் வருகையை, பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மாவட்ட மாறுதல் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும். சத்துணவு உண்ணும் மாணவர்களின் விபரத்தை தலைமையாசிரியர்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை