காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி, வெள்ள அபாயம், கர்நாடக அணைகள்,கர்நாடக கனமழை, வெள்ள அபாய எச்சரிக்கை, கேஆர்எஸ் அணை,  காவிரி கரையோர மக்கள், 
Cauvery, flood risk, Karnataka dams, Karnataka rainfall, flood hazard warning, KRS dam, Cauvery coastal residents,

சென்னை : கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் நிரம்பியதையடுத்து, அங்கிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் ஈரோட்டை வந்தடைந்தது.

நேற்று மாலை முதல் ஈரோடு காவிரி ஆற்றில் நீரின் அளவு 5 அடிக்கு மேல் அதிகரித்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். கரையோரத்தில் இருந்த கோவில் மூழ்கியுள்ளதாகவும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் கேஆர்எஸ் அணையும் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து அதிக அளவில் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shankar - chennai,இந்தியா
14-ஜூலை-201816:38:52 IST Report Abuse
shankar சீமான் ஒரு விஞ்ஞானி தமிழகத்தில் எந்த ஆறுகளிலும் உபரி நீர் என்பதே கிடையாது என்றாரே கர்நாடகத்தில் மலை பெய்தாலே உபரி நீர் வரும் தமிழகத்தில் மழை காலங்களில் ஏராளமான உபரி நீர் கடலில் கலக்கிறதே இது தெரியாத மக்கா அவர். இப்ப என்ன சொல்ல போறார்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
14-ஜூலை-201813:21:42 IST Report Abuse
Ram மேட்டூர் அணைதிறந்தால்தான் ஈரோடு காவேரியில் தண்ணீர் வரும். கர்நாடகாவிலிருந்து ஈரோடிற்கு தண்ணீர் வருவதில்லை. செய்தியை மறுபரிசீலனை செய்யவும்.
Rate this:
Share this comment
Cancel
CBE CTZN - Chennai,இந்தியா
14-ஜூலை-201812:57:29 IST Report Abuse
CBE CTZN செய்தியை மிகை படுத்தாதீர்கள்.. மேட்டூர் அணை நிரம்பவில்லை, தண்ணீர் திறப்பு இல்லை.. பிறகு 5 அடி தண்ணீர் எப்படி... பவானி நிரப்பியதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை