ஜெயலலிதா ஸ்டைலுக்கு ஆசை: முடியாமல் ஸ்டாலின் திணறல் - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., ஸ்டைலுக்கு ஆசை: முடியாமல் ஸ்டாலின் திணறல்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (63)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ADMK, Jayalalithaa, Stalin, அதிமுக, ஜெயலலிதா, திமுக, ஸ்டாலின்,  மாவட்டச் செயலர்கள், M.K.Stalin, DMK,

சென்னை:கட்சியை ஜெயலலிதா பாணியில் நடத்த வேண்டும் என நினைக்கிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின். ஆனால் அதை செயல்படுத்த முடியாமல், கடைசி நேரத்தில் பின்வாங்கி விடுகிறார் என்கிறார் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர்.


இரு பதவிகள்:

அவர் மேலும் கூறியதாவது: கட்சியில் ஒருவரே பல பதவிகளில் இருந்து கொண்டு, மற்றவர்களை வளர விடாமல் செய்து வருவதாக, கட்சியின் செயல் தலைவரான ஸ்டாலினுக்கு தொடர்ந்து ஆதாரங்களுடன் தகவல் வந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும், இரு பதவிகளில் இருக்கும் கட்சியினர் குறித்த விவரங்களைத் தருமாறு பலமுறை கேட்டும், ஒரு மாவட்டத்தில் இருந்தும், ஸ்டாலினுக்கு இதுவரை பட்டியல் வரவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படி பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்ற தெளிவான வரையறைகளோடு, ஒவ்வொரு மாவட்டச் செயலரையும் பலமுறை முடுக்கிவிட்டார் ஸ்டாலின். ஆனால் எந்த மாவட்டச் செயலரும் வேகத்தை காட்டாததோடு, தகவலையும் ஸ்டாலினுக்கு தெரிவிப்பதில்லை. அதனாலேயே, ஒட்டுமொத்த மாவட்டச் செயலர்களையும் மாற்றிவிடலாம் என யோசிக்கிறார். ஆனால், செயல்படுத்துவதற்கு முன் பின்வாங்கி விடுகிறார்.


சிறப்புக் குழு:

தற்போது, கோவி செழியன், தாயகம் கவி, எழில் அரசன் உள்ளிட்ட இளம் எம்.எல்.ஏ.,க்கள் 12 பேரை அழைத்து, தமிழகத்தை ஆறு மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மாவட்டத்துக்கு இரு எம்.எல்.ஏ.,க்களை போகச் சொல்லி, இந்த விவரங்களை திரட்டி வர ஸ்டாலின் பணித்திருக்கிறார். அவர்கள் கொடுக்கும் விவரங்களை வைத்து, பூத் கமிட்டிக்கு சரிவர ஆட்களை நியமிக்காத மாவட்டச் செயலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இரட்டை பதவி வகிப்போரிடம் இருந்து ஒரு பதவி கட்டாயம் பறிக்கப்படும். புதியவர்களுக்கு பதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:26:33 IST Report Abuse
Mani . V ஆசைப்பட்டா மட்டும் போதாது தம்பி, கொஞ்சம் அறிவையும் வளர்த்துக்கணும். கருணாநிதி பையன் என்ற ஒரு தகுதி மட்டும் போதாது.
Rate this:
Share this comment
Cancel
Changes - Pkt,இந்தியா
14-ஜூலை-201820:12:54 IST Report Abuse
Changes திரு. ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியின் மீது ஆசை இருப்பதை போன்று அவருடைய செயல்பாட்டில் தெரியவில்லை. இருந்தாலும் அதிகாரம் இல்லையென்றால் சேர்த்த சொத்துக்களை எப்படி பாதுகாப்பது? சமூகத்தில் மரியாதை, இவ்வளவு நாள் அதிகாரத்துடன் வலம்வந்த நாம் எப்படி சாதாரண மனிதனாக வாழ்வது என்ற குழப்பம் அவரை சுற்றி. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை, சசி குடும்பம் ஆதிக்கம் அவர்களை வளர்ந்துவிட்டது என்று ஜெ ஜெ மீது நிறைய குறைகள் இருந்தாலும், திறமை ஆளுமை என்ற இரண்டு வார்த்தைகள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் ஜெ ஜெ க்கு மட்டும் தான் பொருந்தும். இன்றைய அரசியல் சூழலில் ஸ்டாலின் ஜெ ஜெ போல செயல்படுவது மிகவும் கடினம்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஜூலை-201820:03:44 IST Report Abuse
Bhaskaran சுட்டுப்போட்டாலும் ஜெயின் திறமை வராது தன்னை மட்டும் நம்பி கட்சி நடத்தினவர்கள் இந்திய அரசியலில் வெகுசிலரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X