ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு: வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு: வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.


காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜாசாகர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கர்நாடக அணைகளில் இருந்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது. கடந்த, 11ல், கபினி மற்றும் கே.எஸ்.ஆர்., அணைகளில் இருந்து வினாடிக்கு, 54 ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் திறந்துவிடப்படது. இந்த தண்ணீர் நேற்று, தமிழக எல்லையான, பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. அங்குள்ள மத்திய நீர் ஆணைய கணக்கீடு படி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்து மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில், தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் பால்ஸ்க்கு செல்லும் நடைபாதை மீது தண்ணீர் பாய்ந்தோடுகிறது. நேற்று, ஐந்தாவது நாளாக ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், மாவட்ட நிர்வாகம் தடையை நீட்டித்துள்ளது. வருவாய் துறை, ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆற்றங்கரையோர பகுதிகளில் வசிக்கும், பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை