பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்த்து கடையடைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்த்து கடையடைப்பு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்: பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை எதிர்த்து, சத்தியமங்கலத்தில் கடையடைப்பு நடந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நகராட்சியில், 53 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டப்பணி நடக்கிறது. கழிவு நீர் சுத்திகரிக்க, இரண்டு இடங்களில், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. கூத்தனூர் சாலையில், ஆர்.எம்.பி.நகரில், மாகாளியம்மன் கோவில் அருகே, இரண்டாவது கழிவுநீர் நிலையம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், பவானி ஆறு மாசுபடும் என்று, குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக, அனைத்துக் கட்சியினர் சார்பில், சத்தியமங்கலம் நகராட்சி பகுதியில், நேற்று முழு கடையடைப்பில் ஈடுபட்டனர். நகராட்சியில் உள்ள அனைத்து கடைகள், பூ மார்க்கெட், தினசரி மார்க்கெட் என அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர், நகராட்சி அலுவலகம் முன் ஒன்று கூடினர். ஊர்வலமாக பஸ் ஸ்டாண்ட் சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'பவானி ஆற்றுப்படுகை ஓரத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. இத்திட்டத்தை கைவிட வேண்டும்' எனக்கூறி நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை