பவானிசாகர் நீர்மட்டம் 86 அடியாக உயர்வு: 20 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கின| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் நீர்மட்டம் 86 அடியாக உயர்வு: 20 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கின

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை கொட்டுவதால், பவானிசாகர் அணை நீர்மட்டம், 86 அடியை எட்டியது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்பகுதி மற்றும் அணை நீர்த்தேக்கத்தை ஒட்டிய வனப்பகுதிகளில், ஆறு நாட்களாக, தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கோவை, சிறுவாணி அணை நிரம்பி, உபரி நீர், பில்லூர் அணைக்கு திறக்கப்படுகிறது. அதேசமயம் பில்லூர் நீர் மின் நிலைய அணையில் இருந்து, பவானிசாகர் அணைக்கு நீர் திறக்கப்படுகிறது. இதனால், பவானி ஆறு, மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரத்து, 102 கன அடி தண்ணீர் வந்தது. மாலை, 5:00 மணிக்கு, 12 ஆயிரம கன அடியாக அதிகரித்தது. இதனால் அணை நீர்மட்டம் நள்ளிரவில், 86 அடியை எட்டியது. நீர் இருப்பு, 18.7 டி.எம்.சி.,யாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, 200 கன அடி, அரக்கன் கோட்டை-தடப்பள்ளி பாசனத்திற்கு, 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நீரில் மூழ்கிய வாழைகள்: பவானிசாகர் அணை நீர்ப்பரப்பு பகுதிகளில், வறண்ட நிலப்பரப்பில் அவரை, தட்டைப்பயிர், வாழை பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். அணை நீர்மட்டம், 85 அடிக்கு மேல் உள்ளதால், நீர்ப்பரப்பு பகுதிகளான, சித்தன்குட்டை, கன்ராமொக்கை, அய்யம்பாளையம் மற்றும் ஜெ.ஜெ.,நகர் பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த, 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கதலி, நேந்திரன் ரக வாழை மரங்கள் நீரில் மூழ்கி விட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை