அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் இருந்தால் லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கலாம்: தம்பிதுரை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் இருந்தால் லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கலாம்: தம்பிதுரை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: ''அ.தி.மு.க., ஆட்சியில் ஊழல் இருந்தால், லோக் ஆயுக்தாவில் பா.ஜ.,வினர் புகார் அளிக்கலாம்,'' என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
கரூரில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, திருச்சி, தஞ்சாவூர், பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை ஆகிய இடங்களை தேர்வு செய்தார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாக, எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்காமல், பா.ஜ., அரசுதான் காலம் தாழ்த்தியது. அதற்கு பதில் கூறாமல், பா.ஜ.,வினர்தான், எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தது என, கூறுவது அவர்களின் கட்சி வளர்ச்சிக்குதான். தமிழகத்தில், பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கூறும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அரசு மூலம் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை கூற வேண்டும். ஆளும் கட்சி மீது, எதிர்க்கட்சிகள் ஊழல் குறைபாடு சொல்வது வழக்கமான ஒன்று தான். தற்போது, பா.ஜ., தலைவர் அமித்ஷாவும் சொல்கிறார். தமிழகத்தில் ஊழல் நடந்து இருந்தால், மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல் இருக்குமானால், லோக் ஆயுக்தாவில் பா.ஜ.,வினர் புகார் செய்யட்டும். தமிழகத்தில் எந்த ஒரு தேசிய கட்சியும், திராவிட கட்சிகளை அழித்து விட முடியாது. முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் இருவரும் ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் இருந்து, 20 லட்சம் கோடி ரூபாய் வருவாய், மத்திய அரசுக்கு சென்றுள்ளது. ஆனால், மத்திய அரசு, ஐந்து லட்சம் கோடி ரூபாய்தான் தந்தது. தேர்தல் நேரத்தில்தான், கூட்டணி பற்றி பேசுவோம். கடந்த லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 37 தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வை யாராலும் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க.,வையும், இரட்டை இலை சின்னத்தையும் பிடிக்கப் போவதாக தீபா, தினகரன் இருவரும் கூறுகின்றனரே? இதனால் தொண்டர்கள் குழப்பம் அடைய மாட்டார்களா?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த தம்பிதுரை, ''தீபா என்பவர் யார்? அப்படி யாரையும் எனக்கு தெரியாது. தினகரன் குறித்த கேள்விக்கு, இருப்பதை விட்டு போய்விட்டு, திரும்ப எப்படி பிடிக்க முடியும். யார் அவர்களை போகச் சொன்னார்கள்? தேர்தல் கமிஷன் அறிவிப்பின்படி, முதல்வரும், துணை முதல்வரும் கட்சியின் தலைமை பொறுப்பில் உள்ளனர். அவர்கள் கட்சியை சிறப்பாக வழி நடத்துகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X