1 லட்சம் ரூபாய்க்கு 2 கொலைகள்: கொல்லிமலை வழக்கில் 'திடுக்' தகவல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

1 லட்சம் ரூபாய்க்கு 2 கொலைகள்: கொல்லிமலை வழக்கில் 'திடுக்' தகவல்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொல்லிமலை: கொல்லிமலையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு, இரண்டு கொலைகளை செய்தது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர்நாடு, பகுடிபுதூர் வலவை சேர்ந்த, சகோதரர்கள் முத்துசாமி, 65, ஸ்ரீரங்கன், 57. கடந்த, 5 அதிகாலை அப்பகுதி மயானம் அருகே, இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். வழக்கு தொடர்பாக, வாழவந்தி போலீசார், மூலக்குறிச்சி சிவப்பிரகாசம், 25, பைல்நாட்டை சேர்ந்த, 17 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், 47, அவருடைய அண்ணன் தங்கராஜ், 50, உறவினர் பவுன்ராஜ், 40, ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட, சண்டகிராய்பட்டியை சேர்ந்த, 19 வயதான லாரி டிரைவர் தாமரைக்கண்ணனை, போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: முன்விரோதம் மற்றும் தன் மீதான வழக்கில், எதிராக சாட்சி சொன்ன ஸ்ரீரங்கனை கொலை செய்ய கிருஷணன் திட்டமிட்டுள்ளார். தன் அண்ணனின் நண்பர்களிடம் சொல்லி, ஸ்ரீரங்கனை கொலை செய்ய, ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளார். மாந்திரீகம் என்ற பெயரில், ஸ்ரீரங்கனை, கடந்த, 4 இரவு மூன்று பேர் கூப்பிடச்சென்றனர். ஆனால், முத்துசாமியும் உடன் வந்துவிட்டார். 'இரண்டு பேர் வந்தாலும் பரவாயில்லை, அவரையும் கொலை செய்து விடுங்கள்' என, கிருஷ்ணன் கூறியதையடுத்து, இருவரையும் கொலை செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை