முட்டையுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு: மர்ம கும்பலுக்கு தனிப்படை வலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முட்டையுடன் கடத்தப்பட்ட லாரி மீட்பு: மர்ம கும்பலுக்கு தனிப்படை வலை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஓமலூர்: முட்டையுடன் கடத்தப்பட்ட லாரியை, சேலத்தில் மீட்ட போலீசார், மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பெரியமணலியிலிருந்து, கோவை அருகே, குனியமுத்தூருக்கு, கடந்த, 11 இரவு, 8:30 மணிக்கு முட்டை லோடுடன், லாரி புறப்பட்டது. நாமக்கல், வேலக்கவுண்டம்பட்டியை சேர்ந்த டிரைவர் முனுசாமி, 39, ஓட்டினார். கிளீனர்களாக, அதே பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து, 38, வரதராஜன், 36, இருந்தனர். ஓய்வெடுக்க அவினாசி அருகே, தெக்கலூரிலுள்ள, பெட்ரோல் பங்க்கில் நள்ளிரவு, 2:30 மணிக்கு நிறுத்தினர். அப்போது, காரில் மர்ம கும்பல் வந்திறங்கியது. தொடர்ந்து, லாரி டிரைவர், கிளீனர்களை மிரட்டி, காரில் ஏற்றிக்கொண்டு, அருகிலிருந்த காட்டுக்குள் இறக்கி விட்டு, கும்பல் தப்பியது. பின், டிரைவர், கிளீனர்கள் நடந்து, பங்க் அருகே வந்து பார்த்தபோது, லாரியை காணவில்லை. இதையடுத்து, அவினாசி போலீஸ் ஸ்டேஷனில், முனுசாமி புகாரளித்தார். குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், நேற்று முன்தினம் இரவு விடிய விடிய, சேலம், செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி உள்பட பல இடங்களில் தேடினர். அதில், நேற்று காலை, கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே, கடத்தப்பட்ட லாரி நிறுத்தப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். லாரியை சோதனையிட்ட போலீசார், சேலத்திலிருந்து, நிபுணர்களை வரவழைத்து, கைரேகைகளை பதிவு செய்தனர். பின், லாரியை கைப்பற்றிய போலீசார், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள முட்டை மற்றும் கடத்தல் கும்பல், இப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்ற கோணத்தில் தேடி வருகின்றனர். இதனிடையே, லாரியை அவினாசி கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X