அரசு கல்லூரியில் மாணவருக்கு 'பளார்': முதல்வரை கண்டித்து தர்ணா போராட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் மாணவருக்கு 'பளார்': முதல்வரை கண்டித்து தர்ணா போராட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அரசு கல்லூரியில், மாணவரை அடித்த முதல்வரை கண்டித்து, தர்ணா போராட்டம் நடந்தது.


சேலம் மாவட்டம், ஆத்தூர், வடசென்னிமலை அண்ணா அரசு கல்லூரியில், 2,800 பேர் படிக்கின்றனர். நேற்று காலை, 10:30 மணிக்கு முதல்வர் அருள்ஆண்டனி, வளாகப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, தமிழ் பிரிவு, மூன்றாமாண்டு மாணவர் தினேஷ்குமார், 20, மரத்தடியில் அமர்ந்து, மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம், வகுப்புக்கு செல்லாதது குறித்து முதல்வர் கேட்டதோடு, அத்துறை அலுவலகம் சென்று, வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மற்ற பேராசிரியர்கள் முன், மாணவரை, முதல்வர் அடித்துள்ளார். இதையடுத்து, ஏராளமான மாணவர்கள், 'முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி, நுழைவாயில் முன், தர்ணாவில் ஈடுபட்டனர். பின், முதல்வர், போலீசார் ஆகியோர், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கலைந்து போகச் செய்தனர். அருள்ஆண்டனி கூறுகையில், ''மாணவரிடம், 'உன்னை பயமுறுத்த, கை ஓங்கும்போது தவறி பட்டுவிட்டது. இனி இதுபோன்று நடக்காது' எனக் கூறினேன். இச்செயலால், தொடர்ந்து பிரச்னை ஏற்படாது என, பேச்சுவார்த்தை மூலம், சமாதானப்படுத்தி மாணவர்களை அனுப்பினேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை