முதல்வர் தொகுதியில் 'கழிப்பறை' இல்லை: பா.ஜ., வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதல்வர் தொகுதியில் 'கழிப்பறை' இல்லை: பா.ஜ., வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: ''முதல்வர் தொகுதியில், 'கழிப்பறை' வசதியில்லாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்,'' என, சேலத்தில் பா.ஜ., மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
சேலம், மரவனேரியில் பா.ஜ., அலுவலகத்தில், நேற்று, சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. அதில், மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள அடிப்படை பிரச்னைகள், அதை தீர்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க, பா.ஜ., கள ஆய்வு நடத்தி, போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அந்தவகையில், சேலத்தில் உள்ள சாக்கடை வாய்கால்கள் தூர்வாரப்படாமல் இருப்பது உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் எனக்கூறி போராட்டங்களை நடத்தவுள்ளோம். முதல்வரின் ஊரான இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை இல்லாததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சேலத்தில் ராணுவ அமைச்சகத்தின், டிபன்ஸ் காரிடர் அமையவுள்ளது. அதை சிறு, குறு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை வருங்கால தேவையை கருத்தில் கொண்டே அமைகிறது. இச்சாலை அமைவதன் மூலம் சேலம், ஈரோடு, கோவை பகுதிகளில் தொழில் பெருகும். சில அமைப்புகள் திட்டமிட்டு, பா.ஜ., வை தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று கூறி வருகின்றனர். அதேபோல் சமூக ஆர்வலர்கள், போராளிகள் என கூறிக்கொண்டு தேச விரோத இயக்கங்கள் மக்களை சந்தித்து பேசி வருகின்றன. மாநில அரசு அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ம.க., ராமதாஸ் சமீபத்தில், பா.ஜ., வுடன் கூட்டணியில்லை என கூறியுள்ளார். இதற்கு முன் அவர் எப்படியெல்லாம் பேசிவிட்டு, எவ்வாறு எப்படி நடந்து கொண்டார் என்பதை பின்னோக்கி சென்று பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை