பெரியார் பல்கலை ஆய்வுகளுக்கு மலேசிய பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியார் பல்கலை ஆய்வுகளுக்கு மலேசிய பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: மலேசிய நாட்டு பல்கலையுடன், பெரியார் பல்கலை புவி அமைப்பியல் துறை இணைந்து, ஆய்வுகளை மேற்கொள்ள, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலை கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளை, சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மலேசிய கர்டின் பல்கலை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவு பேராசிரியர் நாகராஜன் தலைமையிலான குழுவினர், பெரியார் பல்கலை வந்துள்ளனர். இரு பல்கலைக்கழகங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது.

துணைவேந்தர் குழந்தைவேல் பேசியதாவது: பல்கலையின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை, சர்வதேச, தேசிய அளவில் கொண்டு சென்று, சர்வதேச தரப்புள்ளிகளை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மலேசியாவின், 13வது மிகப்பெரிய பல்கலையான, கர்டின் பல்கலையுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் மூலம், இரு நாட்டு பல்கலை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தங்களது ஆய்வகம், நவீன உபகரணங்களை கையாளுதல், பயிற்சி பெறுதல், கருத்தரங்கம் நடத்துதல், கூட்டான ஆய்வுக்கருத்துரு மூலம் நிதி பெறுதல் போன்ற பயன்கள் கிடைக்கும். இதன் மூலம், புவி அமைப்பியல் துறையை சேர்ந்த மாணவர்கள், கர்டின் பல்கலையில், பணியிடை பயிற்சி பெற உள்ளனர். இரு நாட்டு பல்கலை மாணவர்களும் ஒன்று அல்லது இரண்டு பருவங்களுக்கான பாடங்களை, இரு பல்கலைகளிலும், கற்கும் வாய்ப்பு குறித்து, அங்கீகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். பதிவாளர் மணிவண்ணன், டீன் கிருஷ்ணகுமார், புவி அமைப்பியல் துறை தலைவர் வெங்கடேஸ்வரன் , ராம்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை