பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பணியார கடை பாட்டிக்கு குவியும் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: பணியார கடை பாட்டிக்கு குவியும் பாராட்டு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த, பணியார கடை பாட்டிக்கு, பாராட்டு குவிகிறது.
தமிழகத்தில், 2019 ஜனவரி முதல், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை, படிப்படியாக அமல்படுத்த, சேலம் மாநகராட்சி பகுதி அரசு அலுவலக வளாகங்களில், கடந்த, 1 முதல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, மாநகராட்சி கமிஷனர் சதீஷ் தடை விதித்தார். தொடர்ந்து, கடைகள், வணிக நிறுவனங்கள், மக்களிடம், அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தால், வியாபாரம் கெட்டுவிடும் என, பல கடைக்காரர்கள், தயக்கம் காட்டுகின்றனர். இந்நிலையில், சேலம், பெரமனூர் சாலையில், பணியார கடை நடத்துபவர் சரோஜா, 50. இவரது கடையில், 'பிளாஸ்டிக் பொருட்களுக்கு அனுமதியில்லை; பாத்திரம் கொண்டு வரவும்' என, பலகையில் எழுதி வைத்துள்ளார். மற்ற கடைக்காரர்களுக்கு முன்னுதாரணமாய், பொறுப்புணர்வை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், நேற்று காலை, 'விடை' தன்னார்வ அமைப்பினர், அவரை பாராட்டி, 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினர்.

சரோஜா கூறியதாவது: கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக, மூன்று தலைமுறையாக பணியார கடை நடத்துகிறோம். சமீப காலத்தில் தான் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் கூட, கவரில் கட்டித்தர வலியுறுத்துகின்றனர். மாநகராட்சியில், தடை அறிவிக்கப்பட்ட நிலையில், பிளாஸ்டிக் கவரில் கட்டித்தருவதில்லை என முடிவு செய்து, பலகை வைத்தேன். இதனால், பெரிய அளவில், வியாபாரத்தில் பாதிப்பு இல்லை. ஓரிரு நாள் தடுமாறிய மக்கள், தற்போது பாத்திரங்களை கொண்டு வந்து, பெற்றுச்செல்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

பெரிய ஓட்டல் நிர்வாகத்தினரே பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவில்லை. ஆனால், பணியாரக்கடை நடத்தி வரும் பாட்டி மிக தைரியமாக பிளாஸ்டிக் பயன்படுத்துவதில்லை என அறிவித்துள்ளதால், அவருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டு குவிந்து வருகிறது. பாட்டியின் நடவடிக்கை பற்றி தெரிந்த பின்னராவது, ஓட்டல் நிர்வாகத்தினர், மற்ற கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை