ரூ.288 கோடியில் கருவூல பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: நவ., 1 முதல் எளிமையாகும் பணப்பரிவர்த்தனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.288 கோடியில் கருவூல பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: நவ., 1 முதல் எளிமையாகும் பணப்பரிவர்த்தனை

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: ''கருவூல கணக்கு துறையில் நிலவும் பிரச்னைகளுக்கு, 288 கோடி ரூபாய் நிதியில், நிரந்தர தீர்வு காணப்பட்டு, நவ., 1 முதல், பணப்பரிவர்த்தனை எளிமையாக்கப்படும்,'' என, அரசின் முதன்மை செயலர் தென்காசி ஜவஹர் கூறினார்.
அரசு துறையின் சேவை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்த சிறப்பு பயிற்சி முகாம், சேலத்தில், நேற்று நடந்தது. அதில், காகித பயன்பாடின்றி அலுவலக நடவடிக்கை, கணினி மூலம் மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண் திட்ட திறனூட்டல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழக அரசின் முதன்மை செயலர், சென்னை, கருவூல கணக்கு துறை கமிஷனர் தென்காசி ஜவஹர் பேசினார்.

பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கருவூல கணக்கு துறை மூலம் மேற்கொள்ளப்படும் ஊதியம், ஓய்வூதியம், அரசு நிவாரண நிதி, பொது வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட அனைத்து பணப்பரிவர்த்தனைகள், காகித பயன்பாடின்றி எளிமைப்படுத்த, 288 கோடியே, 91 லட்சம் ரூபாய் மதிப்பில், திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்கான வெள்ளோட்டம், சேலம், ஈரோட்டில் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் முடிவு, பயனளிப்பதாக உள்ளது. அதனால், தமிழகத்தில், ஒன்பது லட்சம் அரசு ஊழியர்கள், ஏழு லட்சம் ஓய்வூதியர்களின் பணி பதிவேடு, கணினி மயமாக்கப்படுகின்றன. அதன் மூலம், பணப்பலன்கள் உடனுக்குடன் கிடைக்கும். குறிப்பாக, ஓய்வு பெறும் நாளில், ஓய்வூதிய அரசாணை, பணப்பலன் பெறலாம். அதனால், அரசு ஊழியர்கள், மன நிம்மதியோடு வேலை செய்யும் சூழல் உருவாகும். பயனாளிகள் அலைச்சலின்றி, பணப்பலன் பெற வழிவகுக்கும். தமிழகத்தில், 31 மாவட்ட கருவூலங்கள், 238 சார் கருவூலங்கள், சென்னை ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் என, 270 மையங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு, நிரந்தர தீர்வு காணப்படும். இதுதொடர்பாக, ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு, வரும், 31க்குள் சிறப்பு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேவைப்படுவோருக்கு, கூடுதல் பயிற்சியளிக்கப்படும். விப்ரோ லிட்., உள்பட மூன்று நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தும் திட்டம், நவ., 1ல் அமலுக்கு வருகிறது. இந்தியாவில் முதல்முறையாக, தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை