கோவை - சேலம் ரயில் 5 நாள் ரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவை - சேலம் ரயில் 5 நாள் ரத்து

Added : ஜூலை 14, 2018
Advertisement

சேலம்: கோவை - சேலம் பயணிகள் ரயில், ஐந்து நாள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருப்பூர் - கோவை ரயில்வே ஸ்டேஷன் இடையே, தண்டவாள பராமரிப்பு பணி நடக்கிறது. அதையொட்டி, கோவை - சேலம் பயணிகள் ரயில், வரும், 17, 23, 26, ஆக., 2, 4ல் ரத்து செய்யப்படுகிறது. வரும், 17ல், எர்ணாகுளம் - பெங்களூரு; கோவை - சென்னை சென்ட்ரல்; திருவனந்தபுரம் - கோரக்பூர்; மங்களூரு - சென்னை எழும்பூர்; திருவனந்தபுரம் - ஐதராபாத், பாலக்காடு - ஈரோடு ரயில்கள், சூலூர் ரோடு ஸ்டேஷனிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். ஜூலை, 19ல், ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில், 85 நிமிடம்; எர்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில், 45 நிமிடம் தாமதமாக, கோவையிலிருந்து புறப்படும். அதேபோல், சென்னை எழும்பூர் - மங்களூரு; தன்பாத் - ஆலப்புழா; ஐதராபாத் - எர்ணாகுளம்; ஷாலிமர் - திருவனந்தபுரம்; பெங்களூரு - எர்ணாகுளம், சென்னை சென்ட்ரல் - கோவை ரயில்கள், சூலூர் ஸ்டேஷனிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். வரும், 23ல், கோவை - திருப்பூர்; கோவை - சென்னை(கோவை எக்ஸ்பிரஸ்); கோவை - சென்னை(சதாப்தி எக்ஸ்பிரஸ்); திருவனந்தபுரம் - கோர்பா; மங்களூரு - சென்னை எழும்பூர்; திருவனந்தபுரம் - ஐதராபாத், பாலக்காடு - ஈரோடு ரயில்கள், இருகூர் ஸ்டேஷனிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக புறப்படும். இதில், கோவை - திருப்பூர், பாலக்காடு - ஈரோடு ரயில்கள் தவிர்த்து, மற்றவை, 26லும், இருகூரிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். அன்று, ஜெய்ப்பூர் - கோவை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஈரோட்டிலிருந்து, 30 நிமிடம் தாமதமாக புறப்படும். அது, ஆக., 2ல், 40 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். ஜூலை, 28, 30ல், ஆலப்புழா - தன்பாத், 70 நிமிடம்; எர்ணாகுளம் - பெங்களூரு, 35 நிமிடம் தாமதமாக, கோவையிலிருந்து இயக்கப்படும். வரும், 28ல், சென்னை சென்ட்ரல் - மங்களூரு; தன்பாத் - ஆலப்புழா; பாட்னா - எர்ணாகுளம்; பெங்களூரு - எர்ணாகுளம்; சென்னை சென்ட்ரல் - கோவை விரைவு ரயில்கள், இருகூரிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக புறப்படும். அதேபோல், 30ல், இருகூரிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக, சென்னை எழும்பூர் - மங்களூரு; தன்பாத் - ஆலப்புழா; பெங்களூரு - எர்ணாகுளம்; சென்னை சென்ட்ரல் - கோவை ரயில்கள் இயக்கப்படும். ஆக., 4ல், பீளமேடு ஸ்டேஷனிலிருந்து, 15 நிமிடம் தாமதமாக, கோவை எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், மங்களூரு - சென்னை எழும்பூர்; திருவனந்தபுரம் - ஐதராபாத்; பாலக்காடு - ஈரோடு ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X