மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 6 டி.எம்.சி., உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர் இருப்பு 2 நாளில் 6 டி.எம்.சி., உயர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் இருப்பு, இரண்டு நாளில், 6 டி.எம்.சி., அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் தீவிரமடைந்த பருவமழையால் நிரம்பிய, கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 50 ஆயிரம் கனஅடியாக இருந்த கபினி உபரிநீர் திறப்பு, நேற்று, 46 ஆயிரத்து, 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று, மேட்டூர் அணைக்கு, வினாடிக்கு, 38 ஆயிரத்து, 916 கனஅடி நீர் வந்தது. கூடுதல் நீர்வரத்தால், அணை நீர்மட்டம், 75.36 அடி, நீர் இருப்பு, 37.48 டி.எம்.சி.,யாக உயர்ந்தது. இரு நாட்களில், நீர்மட்டம், 7 அடி, நீர் இருப்பு, 6 டி.எம்.சி., அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணை நீர்மட்டம், நேற்று, 120 அடி, நீர் இருப்பு, 43 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை நிரம்பும் நிலையிலுள்ளதால், இன்று, உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X