ஓய்வு பெற்ற வன ஊழியரை வெட்டி கொலை செய்த மகன் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு பெற்ற வன ஊழியரை வெட்டி கொலை செய்த மகன் கைது

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சோளிங்கர்: ஓய்வு பெற்ற வன ஊழியரை, வெட்டிக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். வேலூர் மாவட்டம், சோளிங்கர் அடுத்த, காட்டுப்பாக்கம் மேலூர் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி, 65, ஓய்வு பெற்ற வன ஊழியர். இவர் மகன் சாந்தசீலன், 37. இவருக்கு மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சாந்தசீலன் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு, தந்தையிடம் பணம் கேட்டு வந்தார். கடந்த சில நாட்களாக பாணி பூரி கடை வைக்க, 1.50 லட்சம் ரூபாயை கேட்டு தந்தையிடம் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தூங்கிக் கொண்டிருந்த மாசிலாமணியை எழுப்பி, பணம் கேட்டார். கொடுக்க முடியாது என அவர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தசீலன், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில், சம்பவ இடத்திலேயே மாசிலாமணி இறந்தார். பாணாவரம் போலீசார், கோவிந்தாங்கல் கிராமத்தில் பதுங்கியிருந்த சாந்தசீலனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை