போலீசாரின் மனித உரிமை மீறல்: நீதிமன்றத்தில் டில்லிபாபு வாக்குமூலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் மனித உரிமை மீறல்: நீதிமன்றத்தில் டில்லிபாபு வாக்குமூலம்

Added : ஜூலை 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக, மனித உரிமை நீதிமன்றத்தில், மாஜி எம்.எல்.ஏ., டில்லிபாபு வாக்குமூலம் அளித்தார்.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு, நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை கண்டித்து, கடந்த மாதம், 20ல், கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த, 25 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்நிலையில், கடந்த மாதம், செங்கத்தில் விவசாயிகளை சந்திக்க கம்யூனிஸ்ட் மாஜி எம்.எல்.ஏ., டில்லிபாபு, செங்கம் அடுத்த கரியமங்கலம் பகுதிக்கு வந்தார். அப்போது, போலீசார் அவரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இது குறித்து அவர் கடந்த, 10ல், மனித உரிமைகள் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், நேற்று மனித உரிமை நீதிமன்றத்தில், நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். அப்போது, 'மனித உரிமைகளை மதிக்காமல், அநாகரீகமாகவும், ஆணவமாகவும், தகாத செயலில் ஈடுபட்ட செங்கம் டி.எஸ்.பி., சுந்தரமூர்த்தி மீதும், அவரை தூண்டிய எஸ்.பி., பொன்னி மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்தி வரும் அராஜக போக்கை கைவிட வேண்டும்' என, வாக்குமூலம் அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை