தேர்தலை எதிர்கொள்ள தயார்: பொன்.ராதா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தலை எதிர்கொள்ள தயார்: பொன்.ராதா

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பொன்.ராதா, பா.ஜ.,  தேர்தல், அமித்ஷா

திருச்சி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா அதிமுக அரசை மட்டும் குறைசொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைபடுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை. இதனால், ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகின்றனர். இதை கண்டு பயப்படுவர்களுக்கு அது அவர்களுக்கு சொந்த பயத்தை காட்டுகிறது.லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும். சட்டசபை தேர்தலில் ஆளுமையை நிரூபிக்கும். எந்த நேரத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜ., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர், தமிழகத்தில் முட்டை கொள்முதலில் ஊழல் என சொல்லவில்லை. ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் என பத்திரிகை நிருபர்கள் கேட்டதற்கு தமிழகம் மொட்டை போடப்படுகிறது எனக்கூறினேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:28:50 IST Report Abuse
Mani . V "மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புரோகிராம் செய்யப்பட்டு தயாராக இருப்பதால் நாங்கள் (பாஜக) தேர்தலை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்".
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Meenakshisundaram - karaikudi,இந்தியா
14-ஜூலை-201821:44:29 IST Report Abuse
Viswanathan Meenakshisundaram இருக்கின்ற ஒரு பாஜக mp இனி மறுபடி வர போவதில்லை
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
14-ஜூலை-201816:39:04 IST Report Abuse
Baskar அய்யா பொன்னர் நீங்கள் தமிழகத்தில் தேர்தல் வந்தாலும் அதிக இடங்களில் பி.ஜெ.பி வெற்றி பெரும் என்று நேற்று கண்ட கனவில் சொல்லி இருக்கிறீர்கள். அதிக இடங்களில் பி.ஜெ. பி நோட்டாவுடன் போட்டியிட ஆசை படுகிறது. முதலில் நோட்டாவை வெற்றி பெற்று வாருங்கள் அப்புறம் பார்க்கலாம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை