4 ஆண்டில் 50 ஆண்டு பணி: மோடி பெருமிதம்| Dinamalar

4 ஆண்டில் 50 ஆண்டு பணி: மோடி பெருமிதம்

Updated : ஜூலை 14, 2018 | Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
50 ஆண்டு, பணிகள், ஆண்டு, மோடி, பெருமிதம், பிரதமர்

அசாம்கார்: 50 ஆண்டுகால பணிகளை 4 ஆண்டுகளில் செய்துள்ளோம் என்றும், சுதந்திரம் அடைந்த நாள் முதல் இது போன்ற வளர்ச்சியை இந்தியா பெறவில்லை என்றும் உ .பி.,யில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
அவர் மேலும் பேசியதாவது:


வளர்ச்சியே எங்களின் இலக்கு


ரூ.23000 கோடி செலவில், பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் துவக்கி வைக்கப்படுகிறது. நாங்கள் இங்கு மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளோம். இந்த நாள் உ .பி., கிழக்கு பகுதியின் முக்கிய முன்னேற்ற நாள் ஆகும். முதல்வர் யோகிநாத் தலைமையிலான ஆட்சிக்கு பின்னர் முதலீடுகள் பெருகியுள்ளது.
இவர் மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு வருகிறார். அசாம்கார் பகுதி பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளை தந்துள்ளது. மாநிலத்தை வளர்ச்சி மாநிலமாக்கி புதிய உச்சத்திற்கு கொண்டு செல்கிறோம். குண்டர்கள் கலாச்சாரம் இங்கு ஒழிக்கப்பட்டுள்ளது. சுதந்திரம் அடைந்த காலம் முதல் இந்தியா தற்போது அபார வளர்ச்சி பெற்றுள்ளது. வளர்ச்சியே எங்களின் இலக்கு. தொழில்நுட்ப பயிற்சி, மருத்துவ கல்லூரிகள் பெருகி வருகிறது.
50 வருட காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை நாங்கள் 4 ஆண்டுகளில் செய்துள்ளோம். மக்களை இணைக்கும் போக்குவரத்து முக்கியமானது. தேசிய நெடுஞ்சாலை பணிகள் இரண்டு மடங்காக நடந்துள்ளது. வீடு இல்லாதோருக்கு இது வரை 1 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இன்னும் விமான போக்குவரத்தை அதிகரிக்க முன்வந்துள்ளோம். விவசாயிகள், ஏழைகள், தலித் மக்கள், கிராம முன்னேற்றமே எங்களின் இலக்கு. எதிர்கட்சியினர் ஒட்டுகளையே குறியாக இருக்கின்றனர். மக்கள் பணியாற்ற தயாராக இல்லை. ஓட்டுக்காக எதிரிகளாக இருந்தவர்கள் சேருகிறார்கள்.


முஸ்லிம்களுக்கு யார் ஆதரவு


முஸ்லிம் மக்களுக்கு நன்மை செய்வதாக சொல்லும் எதிர்கட்சியினர் , முஸ்லிம் பெண்களை நினைத்து பார்க்கவில்லை. அவர்களுக்கான முத்தலாக் தடை சட்டத்தை நாங்களே கொண்டு வந்தோம். கடந்த காலத்தில் நடந்து வந்த வாரிசு அரசியலால் மாநிலம் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumarGv -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-201806:10:23 IST Report Abuse
KumarGv மோடி: இன்னும் 10 மாதம்தான் இருக்கும் போல, ம்ம்.......ம் நான் போகாத நாட்டையெல்லாம் சேர்த்து ஒரு லிஸ்ட் ரெடி பண்ணுங்க போயிட்டு வரலாம் (செவ்வாய்ல இருந்தாலும் சரி). எடுபிடி: உத்தரவு எசமான்.
Rate this:
Share this comment
Cancel
jothivasu N - Bangalore,இந்தியா
15-ஜூலை-201804:16:50 IST Report Abuse
jothivasu N மோடியின் நான்காண்டு, மக்களை வொரு ஐம்பது ஆண்டு பின்னோக்கி தள்ளி யுள்ளது. நாம் இப்போது தான் 1968 இல் உள்ளோம்.
Rate this:
Share this comment
shankar - milton,கனடா
15-ஜூலை-201806:49:23 IST Report Abuse
shankarசும்மா பிலா விட்டு எழுத வேண்டாம் . மோடி புள்ளி விவரத்தோடு பேசுகிறார். பச்சை புள்ள ராவுல் மாதிரி பேப்பரை படிச்சு பேசவில்லை....
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
14-ஜூலை-201821:31:42 IST Report Abuse
spr சிறப்பான கருத்தே எனினும், இதனை இந்த நாட்டு மக்கள் சொல்ல வேண்டும் இதுவரை விளம்பர படுத்தப்பட்ட பல திட்டங்கள் (ஒரு சிலவற்றைத்தவிர) பல ஏட்டளவிலேயே உள்ளன விவேகமில்லா வேகம் எனினும் ஐந்தாண்டுகளில் இந்தியா போன்ற சுதந்திரத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட ஒரு நாட்டை மாற்றுவது எளிதல்ல என்பதால் பாராட்டலாம் காங்கிரஸ் தயங்கிய ஜிஎஸ்டி வரிவிதிப்பால் இதுவரை வரி ஏய்ப்பு செய்த வணிகர்கள் முறையாக வரி கட்ட வைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர் ஆனாலும் முஸ்லிம் மக்களுக்கு நன்மை செய்வதாக சொல்லும் எதிர்கட்சியினர் , முஸ்லிம் பெண்களை நினைத்து பார்க்கவில்லை. அவர்களுக்கான முத்தலாக் தடை சட்டத்தைகே கொண்டு வந்த பெருமை பாஜகவிற்கே சேரும் இதனைப் பாராட்டவே வேண்டும் இதுவரை இஸ்லாமிய பெருமக்களை வாக்கு வங்கியாக மட்டுமே அனைத்துக் கட்சிகளும் பார்த்த நிலையில், அவர்களை இந்தியர்களுடன் ஒன்றவிடாமல், மதம் காரணமாக பிரித்து வைத்தே வந்த நிலையில் அவர்களை இந்திய நீரோட்டத்தில் கலக்க வைத்த முயற்சி பாராட்டற்குரியதே ஒரு நாடு ஒரே சட்டம் காலத்தின் கட்டாயம்
Rate this:
Share this comment
15-ஜூலை-201805:54:07 IST Report Abuse
senthilபலதார மணத்தையும் தடை பண்ணனும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X