'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'லண்டனுக்கே திரும்பி போங்க'
சென்னை வரும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, தி.மு.க.,வினர் பயன்படுத்திய ஆயுதத்தை, பா.ஜ.,வினர், நேற்று கையிலெடுத்தனர். 'டுவிட்டர்' வலைதளத்தில், ஸ்டாலினுக்கு எதிரான கருத்துகளை பரப்பி, தி.மு.க.,வினரை அதிர வைத்தனர்.

லண்டனுக்கே,திரும்பி போங்க, சென்னை, வரும், ஸ்டாலினுக்கு, எதிர்ப்பு


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், லண்டன் பயணத்தை முடித்து, இன்று காலை, சென்னை திரும்புகிறார். ஆண்டுதோறும், லண்டனுக்கு சென்று, மருத்துவ பரிசோதனை செய்வது, ஸ்டாலின் வழக்கம். 9ம் தேதி, சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், அன்று இரவு, தன் குடும்பத்தினருடன், லண்டன் சென்றார்.

நேற்று முன்தினம் இரவு, அவர் சென்னை திரும்புவதாக, பயணத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.ஆனால், மருமகன் சபரீஷன் தன் பிறந்த நாளை ஒட்டி, குடும்பத்தினருடன் லண்டன் சென்றுள்ளார். அங்கு, அவர் பிறந்த நாளை கொண்டினார்.

இன்று காலை, ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும், சென்னை திரும்புகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வந்த போதும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா, சென்னை வந்த போதும், அவர்களை திரும்பி செல்ல வலியுறுத்தி, 'கோ பேக் மோடி, கோபேக் அமித் ஷா' என்ற தலைப்பில், டுவிட்டரில் எதிர் கருத்துகளை பலர் பதிவிட்டனர். இது, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டினர். தங்கள் தலைவர் களுக்கு எதிராக, தி.மு.க.,வினர் பயன் படுத்திய ஆயுதத்தை, தற்போது, பா.ஜ., வினரும் கையில் எடுத்துள்ளனர்.

லண்டன் சென்றுள்ள ஸ்டாலின், இன்று சென்னை திரும்புவதை யொட்டி, 'ஸ்டாலினே திரும்பி போங்க' என கூறும், ஆங்கில வாக்கியமான, 'கோ பேக் ஸ்டாலின்' என்ற தலைப் பில், எதிர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து, உஷாரான, தி.மு.க.,வினர், உடனடியாக, 'வெல்கம் ஸ்டாலின்'என, ஸ்டாலினை வரவேற்று, கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.'டுவிட்டர்' வலைதளத்தில், 'கோ பேக் ஸ்டாலின்' என்ற பதிவில், பா.ஜ.,வினர் கூறியுள்ளதாவது:

Advertisement

* இந்தியாவுக்கு, நீங்கள் திரும்பி வந்த பின், என்ன செய்ய போகிறீர்கள்; பேசாமல் நீங்கள், லண்டனில் இருந்து விடுங்கள்

* சுதந்திர தினம், குடியரசு தினம், பழமொழி தெரியாது; 'நீட்' தேர்வால் இறந்த மாணவியின் பெயர் தெரியாது; மக்களுக்கு உழைக்க தெரி யாது; நல்ல திட்டம் கொண்டு வர தெரியாது

* லண்டனில், நீங்கள் டென்னிஸ் விளையாட்டை பார்க்கலாம்; ஆனால், தமிழகத்தில், ஐ.பி.எல்., பார்க்கக் கூடாது

* நீங்கள் கைகளில் கட்டியிருப்பது, 'ரோலக்ஸ்' எட்டு லட்சம் ரூபாய் வாட்ச்; ஆனால், மக்களுக்கு ரோடு வேண்டாம்; ஆங்கிலம் வேண்டாம்; ஆலைகள் வேண்டாம். எனவே, நீங்கள் தமிழகம் வராதீர்கள்;கோ பேக் ஸ்டாலின். இவ்வாறு டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (207)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Surya Sweet - Chennai,இந்தியா
23-ஜூலை-201809:57:26 IST Report Abuse

Surya Sweetஇந்த ஸ்டாலின் எப்போதாவது தான் லண்டன் போகிறார் அதுவும் அவர் உடல்நலன் கருதி அவர் தன் செலவில் சென்று வருகிறார். அது அவரது உரிமை, உங்கள் தலை போல ஆயிரம் ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை வாயிலும் வயிற்றிலும் அடித்துச் செல்லவில்லை... இப்போதெல்லாம் உங்கள் தலை இந்தியாவில் இருப்பதே ஏதாவது ஒரு மாநிலத்தில் எலக்ஷ்ன் வந்தால் மட்டுமே... அவர் இந்தியாவில் இருந்து கிழித்தது நாடறியும்...

Rate this:
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
24-ஜூலை-201819:50:39 IST Report Abuse

Giridharan SrinivasanSurya Sweet - Chennai,இந்தியா, உங்க ஸ்டாலினுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? மக்கள் வரிப்பணத்தை எம்.எல்.ஏ. என்ற பெயரில் கொள்ளை அடித்த பணத்தில் தான் லண்டனுக்கு போயிட்டு வராரு. உங்க ஸ்டாலினும், தி.மு.க வும் தமிழ் நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை நம் தேசம் நன்கு அறியும். தமிழ் நாட்டை குட்டிசுவராக்கி முன்னேறவிடாம செய்தது, தமிழ் நாட்டு மக்களை தண்ணீருக்கு பிச்சை எடுக்க வைத்தவர்களில் இந்த ஆளும் ஒருவர். இது எல்லாம் நம் தேசம் அறியும், குறிப்பாக தமிழ் நாட்டு மக்கள் நன்கு அறிவர்....

Rate this:
murali - Chennai,இந்தியா
21-ஜூலை-201811:42:42 IST Report Abuse

muraliதமிழகம் வளரவேண்டுமானால் சுடலை இன்னும் ஒரு 10 வருடம் லண்டனில் இருக்கலாம். அது அவர் தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் செய்யும் நல்ல காரியம். செய்வாரா?

Rate this:
Devanand Louis - Bangalore,இந்தியா
21-ஜூலை-201800:04:50 IST Report Abuse

Devanand Louisஇந்த கோமாளி கூமுட்டை இங்கு இருந்து எந்த பயன் ? ஓடிவிடு லண்டனுக்கே

Rate this:
மேலும் 203 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X