தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது| Dinamalar

தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது

Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சபரிமலை,தேவசம் போர்டு,நிபந்தனை,நடைமுறை,சாத்தியமற்றது

புதுடில்லி : ''சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய, பெண்கள், 41 நாட்கள் விரதம் இருப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்து உள்ளார்.

கேரளாவிலுள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. பல நுாறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்றைய விசாரணையின் போது, தேவசம் போர்டு சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: உலகின் வேறெந்த கோவில்களிலும் இல்லாத நடைமுறை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது. இந்த கோவிலில் மட்டும் தான், 10 - 50 வயதிற்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.

மற்ற இடங்களில் உள்ள அனைத்து அய்யப்பன் கோவில்களிலும், அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம். பல நுாறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் நடைமுறையை, திடீரென மாற்ற முடியாது. பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கு பிரச்னையால், அவர்கள் சபரிமலைக்கு வந்தால், கோவிலின் புனித தன்மை பாதிக்கப்படும்.

இதன் காரணமாகவே, குறிப்பிட்ட வயதிற்குட்பட்ட பெண்கள், சபரிமலையில் அனுமதிக்கப்படுவதில்லை. எந்த வயதை சேர்ந்த, ஆண்கள், பெண்களாக இருந்தாலும், தொடர்ந்து, 41 நாட்கள் விரதம் இருந்தால், சபரிமலையில், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதாக, தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

கேரள மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். இதற்கிடையே, தேவசம் போர்டின் நிபந்தனைக்கு, மனுதாரர் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறிக்கிட்ட, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, ''தேவசம் போர்டு, சட்டப்படி செய்ய முடியாததை, நிபந்தனை விதிப்பதன் மூலம் செய்ய முயற்சிக்கிறது. பெண்கள், 41 நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பது என்பது, நடைமுறையில் சாத்தியமற்றது,'' என்றார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
20-ஜூலை-201816:21:29 IST Report Abuse
r.sundaram ஆணும் பெண்ணும் ஒன்று என்றால் முஸ்லீம் பெண்களுக்கு மட்டும் ஏன் பர்தா? இனிமேல் முஸ்லீம் பெண்களுக்கு பர்தா கூடாது என்று அந்த நீதிமன்றம் கூறுமா? அந்த தைரியம் உண்டா அந்த நீதிமன்றத்துக்கு? ஹிந்துமதம் என்றால் எல்லோருக்கும் இளப்பமாக போய்விட்டது போலும். புரிந்துகொண்டும் புரியாதது போல் நாடகமாடுபவர்களுக்கு எதிராக நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இதை முடிவுக்கு கொண்டுவர ஒரே வழி அகிம்சை வழி. அய்யப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து அவரவர்கள் ஊரில் உள்ள கோவில்களில், நமது பழக்க வழக்கங்களை மாற்றினால், சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றம் நடவடிக்கை எடுத்தால் அங்கும் உண்ணாவிரதம் தொடர வேண்டும். இது எல்லாமே மஹாத்மா கற்றுத்தந்த பாடம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
20-ஜூலை-201816:04:43 IST Report Abuse
Nallavan Nallavan பல சந்தர்ப்பங்களில் "எங்க நேரத்தைக் கெடுக்குறியே" என்று வழக்குத் தொடர்ந்தவர் மீது சீறிப்பாயும் நீதிமன்றங்கள் அசாதாரண ஆர்வத்துடன் இந்த வழக்கை எடுத்துக்கொண்டு பல மாதங்கள் இதில் மூழ்கிக்கிடக்கும் மர்மம் என்ன ????
Rate this:
Share this comment
Cancel
vel - ,
20-ஜூலை-201813:29:23 IST Report Abuse
vel திட்டம் என்னன்னா திடீர்ன்னு பெண்களை விட்டவுடன் ஏதாவது சின்ன பிரச்சனை வராதா அதையே சாக்கா வச்சு அதை பெரிசு படுத்தி கோவிலை மூடிற மாட்டோமாங்கிறது இந்த நரிகளின் கணக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X