சோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல் கட்சினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல் கட்சினர்

Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (49)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
செய்யாதுரை,ரகசிய சிடி, அரசியல் கட்சினர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரை, வருமான வரித்துறை  சோதனை, சிடி விவகாரம், அரசியல் கட்சிகள், Political Party, Highways Department Contractor, Income tax department, CD affair, secret CD, Seiyadurai ,

சென்னை : நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய பிரமுகர்களின் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள 'சிடி' சிக்கியுள்ளது. இது தொடர்பாக, வருமான வரித்துறை தரப்பில், தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், 'சிடி' விவகாரம் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுர்களுக்கு கசிந்துள்ளது. இதனால் பலர் கலக்கத்தில் உள்ளனர்.

ஏனெனில், 'சிடி'யில், 42 பேரின் உடையாடல்கள் பதிவாகி உள்ளன. ஜெ., மறைந்த பின், சசிகலா முதல்வராவதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், கூவத்துார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.அப்போது, சசிகலாவிற்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, கோடிக்கணக்கில் ரூபாய் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது. எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்குவதற்காக, செய்யாத்துரையிடம், பணம் கொண்டு வரும்படி முக்கிய பிரமுகர்கள் பேசியதை அவர் பதிவு செய்து வைத்துள்ளார்.

அதேபோல் அதிகாரத்தில் இருப்போர் பலர் அவரிடம் பண விவகாரம் குறித்து பேசியதை பதிவு செய்துள்ளார். அந்தப் பதிவுகள் அனைத்தையும் 'சிடி'யாக்கி, பாதுகாப்பாக வைத்திருந்தார். அந்த, 'சிடி'தான் தற்போது வருமான வரி அதிகாரிகளிடம் சிக்கி உள்ளது. அதில் அ.தி.மு.க., பிரமுகர்கள் மட்டுமின்றி, மாற்று கட்சியினர் பேசிய தகவல்களின் பதிவும் உள்ளதாம்.

இது தொடர்பான தகவல்கள் வெளியானால், பல தலைகள் உருளக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது செய்யாதுரையுடன் தொடர்பில் இருக்கும், அரசியல் புள்ளிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sukumaran Sankaran Nair - Taiping (Perak).,மலேஷியா
25-ஜூலை-201817:46:07 IST Report Abuse
Sukumaran Sankaran Nair நாட்டு நடப்பை துல்லியமாக,துரிதமாக,துணிவுடன் நம்மிடம் சேர்ப்பதற்கு செய்தியாளர்கள்,'என்ன,எங்கே,எப்போது மற்றும் எப்படி'என்ற கட்டமைப்புடன் தங்கள் கடமையை தங்கள் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் சேவையாற்றும் இவர்கள் தான் நாட்டின் நல்லாட்சி முறைமையை அடுத்த கட்டத்திற்கு மாற்றவல்ல முகவர்கள். இன்றைய தலைவர்கள் ஏன் நிலை தடுமாற்றங்களுக்கும்,ஊழல்களிலும் சிக்கித்தவிக்கும் நிலைக்கு தள்ளப்படவேண்டும் என சிந்திப்போமானால்,அவர்கள் யார்? மக்கள் சேவையில் தங்களை அரப்பணித்தவர்களா? தூய்மை நோக்கம்,பக்குவப்பட்ட மனம் ,காழ்ப்புணர்வு இல்லாத தன்னலமற்றவர்கள் தானா என்ற வினாக்களுக்கு தகுதிபெற்றவர்களாக விளங்குபவர்களையே தேர்ந்தெடுப்பதற்கு முனைவோமானால், நல்லாட்சி முறைக்கான முன்நிபந்தனைகள் நம் மனதில் உருவாகும். தாய்மை உணர்வு இல்லாத,நற்பண்புகள் அற்றவர்கள் நாட்டை வழிநடத்த நாம் உரிமை வழங்குவோமானால்,நாமும் நிந்தனைகளுக்கு உடந்தையானவர்களாவோம். ஆகவே தான் தன்னலமற்ற சேவையில் தங்களை அர்ப்பணிக்கும் அரசியல கட்சிகளில் ஈடுபடாத மற்றும் சாதி,மத,இன பாகுபாடற்ற மனிதாபிமானம் கொண்டவர்களை இன்று நிர்வாகத்துறையில் மட்டுமல்லாது,உயர்மட்ட தலைவர்களாகவும் இந்த தனித்துவ தன்மைமாற்ற நவீன யுகத்தில்(Modern Era of Transformation) பெண்கள் பங்கேற்பு அதிக அளவில் காணப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
24-ஜூலை-201811:08:34 IST Report Abuse
Devanatha Jagannathan இந்த அரசியல் வாதிகளிடம் ஒரு பருப்பும் வேகாது. வருடங்கள் உருண்டோடும் கொள்ள அடிச்ச காசை பங்கு போடுப்பாங்க.
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
20-ஜூலை-201815:00:57 IST Report Abuse
manivannan பைபிள் ல் கருவாடு மீனானதாக கதை எல்லாம் இல்லை . ப்ளீஸ் உங்கள் சர்ச்சையில் பைபிள் ஐ இழுக்காதீர்கள் எந்த மதத்தினரையும் இழுக்காதீர்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X