ஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ராகுல்| Dinamalar

ஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ராகுல்

Updated : ஜூலை 21, 2018 | Added : ஜூலை 20, 2018 | கருத்துகள் (228)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

புதுடில்லி:''நேருக்கு நேர், என் கண்களை பார்த்து, பிரதமர் நரேந்திர மோடியால் பேச முடியவில்லை,'' என, காங்., தலைவர் ராகுல் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, காங்., மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, பார்லியில் நேற்று தாக்கல் செய்தன.இந்த தீர்மானம் மீது, காங்., தலைவர் ராகுல் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, என்னை, 'பப்பு' என்றோ, வேறு பெயர்களை வைத்தோ கூப்பிடலாம். இருப்பினும், பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வுக்கு எதிராக எனக்கு வெறுப்புணர்வு கிடையாது.காங்கிரஸ், வாழ்க்கை, ஹிந்துவாக இருத்தல் ஆகிய மூன்றின் அர்த்தத்தை சொல்லித் தந்ததற்காக, பிரதமருக்கும், ஆர்.எஸ்.எஸ்., - பா.ஜ.,விற்கும் நன்றி தெரிவிக்கிறேன்.தெரிவிக்க முடியாது

லோக்சபாவில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசினார். பண மதிப்பிழப்புத் திட்டம், ஜி.எஸ்.டி., வரி அமல்படுத்தப்பட்ட விதத்தை கடுமையாக குறை கூறி பேசினார். ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது; பிரதமரின் நண்பர் ஆதாயமடைந்துள்ளார் என்று குற்றம்சாட்டினார். பிரதமரின் இதயத்தில் ஏழைகள் இல்லை; சில தொழிலதிபர்களுக்குத்தான் இடம் இருக்கிறது என்றார்.

'ரபேல் ஆயுதங்கள் தொடர்பாக, பிரான்ஸ் அரசுடன் ரகசிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால், அதுகுறித்த தகவல்களை தெரிவிக்க முடியாது' என, ராணுவ அமைச்சர் கூறினார்.ஆனால், 'இரு நாடுகள் இடையே ரகசிய ஒப்பந்தம் எதுவும் கிடையாது' என, பிரான்ஸ் அதிபரே, என்னிடம் தனிப்பட்ட முறையில் கூறியுள்ளார்.
இது தொடர்பான ஒப்பந்தம், எச்.ஏ.எல்., லிடம் இருந்து வாபஸ் பெறப்பட்டு, வேறு ஒரு நபருக்கு அளிக்கப்பட்டு உள்ளது; அந்த நபர், 40 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளார்.இந்த விஷயத்தில், ராணுவ அமைச்சர், உண்மை அல்லாததை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில், கேபினட் கமிட்டிக்கு பலன் இருந்ததா என்பதை பிரதமர் விளக்க வேண்டும். இதில் தொடர்புடைய தொழிலதிபருக்கு, பலன்கள் கிடைத்தது ஏன்?பிரதமர் மோடி என்னை பார்க்கையில், புன்முறுவல் பூக்கிறார். ஆனால், அவரது உள்மனதில் உறுத்தல் காணப்படுவதால், என்னை நேராக பார்ப்பதை தவிர்க்க முயற்சிக்கிறார்; அதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

தான் உண்மையாக இருக்க முடியாது என்பதை பிரதமர் தெரிந்து வைத்திருக்கிறார். அதனால், நேருக்கு நேர், என் கண்களை பார்த்து, அவரால் பேச முடியவில்லை.
பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோருக்கும், எங்களுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. நாங்கள் அதிகாரத்தை இழக்க தயாராக உள்ளோம். ஆனால், பிரதமரும், பா.ஜ., தேசிய தலைவரும், அதிகாரத்தை இழக்க முடியாது.அவர்களிடம் இருந்து அதிகாரங்கள் பறிபோனால், அவர்களுக்கு எதிராக, பிற நடவடிக்கைகள் துவங்கி விடும்.எனவே, பிரதமரும், பா.ஜ., தலைவரும், பயத்துடன் செயல்படுகின்றனர். அந்த பயம், இந்தியாவில் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறது.
நாட்டில் யாராவது தாக்கப்பட்டால், அது, அம்பேத்கர் மீது, அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது.அதுபற்றி, ஒரு வார்த்தை கூட, பிரதமர் பேசியது கிடையாது. அவர்கள் எல்லாம், இந்நாட்டின் அங்கத்தினர் இல்லையா? மாறாக, குற்றம் இழைத்தவர்களை, அமைச்சர்கள் நேரில் சந்தித்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
தே.ஜ., ஆட்சியில், பல்வேறு பொய் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும்; ஆண்டுக்கு, இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என, பொய்களை அவிழ்த்து விட்டனர்.
'சூட் - பூட் அரசு'
கடந்த, 2016 - 17ம் ஆண்டில், நாடு முழுவதிலும், நான்கு லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்ததாக, தொழிலாளர் துறை கணக்கெடுப்பு கூறுகிறது. எங்கு சென்றாலும், வேலை வாய்ப்பு பற்றி பேசும் பிரதமர், பக்கோடா கடைகளை துவங்கும்படி சொல்கிறார்; சிறு தொழில்கள் மற்றும் கடைகள் மூலம், வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கிறார்.ஒரு நாள் இரவு, 8:00 மணிக்கு, திடீரென, கறுப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, பிரதமர் முடிவு செய்கிறார். செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவிக்கிறார்.
ஆனால், விவசாயிகளும், ஏழைகளும், ரூபாய் நோட்டுகளை வைத்தே பரிமாற்றங்கள் செய்வதை பிரதமர் மறந்து விட்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அரசு, 'சூட் - பூட் அரசு' ஆக திகழ்கிறது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர், சிறு தொழில் நடத்துவோர் பற்றி பேசுவதில்லை. ஏழைகள், நலிவடைந்தோர் இதயத்தில் உள்ளவை, பிரதமர் மனதை சென்றடைவதில்லை.இவ்வாறு அவர் பேசினார்.
மோடியை கட்டித்தழுவிய ராகுல்

பார்லியில், பேச்சை முடித்தபின், தன்னை நோக்கி, ராகுல் நடந்து வந்தபோது, அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை அறியாமல், பிரதமர் மோடி, குழப்பத்துடன் தன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். ஆனால், தன்னை கட்டித்தழுவி, ராகுல் ஏதோ கூறிய பின், நிலைமையை புரிந்த மோடி, ராகுலின் முதுகில் தட்டிக்கொடுத்து, பதிலுக்கு ஏதோ கூறினார்.இருவரும் பேசிய வார்த்தைகள் தெளிவாக கேட்கவில்லை. அங்கு நடந்தவற்றை, மோடி அருகில் அமர்ந்திருந்த, பா.ஜ., உறுப்பினர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

அதைத் தொடர்ந்து, தன் இருக்கைக்கு திரும்பிய ராகுல், ''இந்துவாக இருப்பது என்பதன் அர்த்தம் இதுதான்,'' என்றார். இதையடுத்து, சோனியா உட்பட, அங்கிருந்த, காங்., உறுப்பினர்கள் மேசைகளை தட்டி கரகோஷம் எழுப்பினர்.ராகுலின் செயல் அடங்கிய, 'வீடியோ கிளிப்' தொலைக்காட்சி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்பாகின. ஏராளமானோர், அந்த வீடியோவை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து, காரசாரமாக விவாதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (228)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
25-ஜூலை-201817:23:40 IST Report Abuse
S.prakash இந்திய எல்லையில் ஆக்கிரமிப்பு செய்த சீன அதிபர்களை மோடி கட்டி பிடிக்கலாம், ராகுல் மீது எந்த தவறும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
deva - chennai,இந்தியா
25-ஜூலை-201815:43:52 IST Report Abuse
deva யாரோ எழுதிக்கொடுத்ததை பேசிவிட்டு, யாரோ சொன்னதை கேட்டு கட்டிப்பிடித்து, தன் செயலுக்கு தானே பெருமைப்பட்டுக்கொண்டு தன் சகாக்களை பார்த்து சிறுபிள்ளைத்தனமாக கண் சிமிட்டி,தன் தகுதி இவ்வளவுதான் என்று நிரூபித்து காட்டிய ராகுலை வருங்காலத்தில் பிரதமராக கற்பனை செய்து பார்த்துக்கொள்ளும் துணிச்சல் யாருக்கும் வராது.
Rate this:
Share this comment
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
24-ஜூலை-201818:38:59 IST Report Abuse
muthu Rajendran நன்றாக பேசியபிறகு பிரதமர் ஒரு வேளை பாராட்டியிருந்தாலாவது அப்போதுகூட ஒரு நன்றி சொல்லுவதே பொருத்தமாக இருக்கும் ஆனால் வேகமாக பேசிவிட்டு கட்டிபிடித்தது பொருத்தமாக இல்லை. பேசியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சொன்னது போல் அல்லவா இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X