chennai | சென்னையில் புகைப்பட திருவிழா| Dinamalar

சென்னையில் புகைப்பட திருவிழா

Updated : ஜூலை 21, 2018 | Added : ஜூலை 21, 2018
Advertisement

சென்னை நந்தனத்தில் இமேஜ் அமைப்பின் சார்பில் போட்டோ மற்றும் வீடியோ கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்துவருகிறது.

புகைப்படக்கலையின் தற்போதைய நிலவரத்தை அறிந்துகொள்ளவும் தங்களை வளர்த்துக் கொள்ளவும் ஆர்வம் உள்ள புகைப்படக்கலைஞர்களால் அரங்கம் நிறைந்து காணப்பட்டது.

புதிய வீடியோ மேமிராக்கள் எவ்வளவு துல்லியமாக படம் எடுக்கிறது என்பதை காட்டுவதற்காக 'மாடல்களை' வைத்து படம் எடுத்து பெரிய திரையில் காட்டிக்கொண்டு இருந்தனர்.

ஒரு கோமாளி பந்து வளையத்தை துாக்கிப்போட்டு விளயைாட்டு காட்டிக்கொண்டு இருந்தார் இவருக்கு இங்கு என்ன வேலை என்று யோசித்த போது ஸ்லோஷட்டர் ஸ்பீடில் வீடியோ செய்யலாம் என்பற்கான டெமோ அது என்று தெரிவித்தனர்.

திருமண விழாவினை படம் எடுக்கும் போட்டோ மற்றும் வீடியோகிராபர்களை கவரும் விதத்தில் நிறைய ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இருந்தன,குளோ அரங்கில் நகைப்பட்டி போல இருந்த திருமண ஆல்பம் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

கேரிகேச்சர் என்று சொல்லக்கூடிய தலை பெரிதாகவும் உருவம் சிறிதாகவும் காட்டக்கூடிய விதத்தில் படத்தினை கட்அவுட் செய்துதருவதும், விளக்கொளியின் பின்னனியில் படம் தெரியும் விதத்தில் பிரேமிட்டு தருவதும்,முப்பரிமாணத்தில் படம் கொடுப்பது போன்ற பல புதுமையான விஷயங்களை காணமுடிந்தது.

பல சர்வதேச விருதுகளை பெற்ற ஸ்கந்தகிருஷ்ணனின் புகைப்பட கண்காட்சி ஒரு பக்கமும் இலவச பயிற்சி வகுப்புகள் ஒரு பக்கம் என எல்லாபக்கமும் என கண்காட்சி களைகட்டியிருந்தது.

தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி ஸ்டாலில் மூத்த புகைப்படக்கலைஞர்கள் ஏஆர்சி சண்முகம்,பாரதி,போட்டோக்காரன் தாஸ் ஆகியோரை ஆசிரியர் பழனிக்குமாருடன் பார்க்கமுடிந்தது.

கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது அரங்கத்தில் ஏசி வசதியும் குடிதண்ணீர் வசதியும் சரிவர இல்லாதது ஒரு குறை அந்த குறையையும் இன்று இருக்காது என்று நம்புவோம்.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in




Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X