chennai | பழம் பெருமை பேசும் கேமிரா கலைஞர் பிரசாத்ராவ்| Dinamalar

பழம் பெருமை பேசும் கேமிரா கலைஞர் பிரசாத்ராவ்

Updated : ஜூலை 21, 2018 | Added : ஜூலை 21, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை நந்தனத்தில் நடந்துவரும் இமேஜ் புகைப்பட கண்காட்சியில் கிரேசி ஸ்டூடியோ அண்ட் ஒர்க் ஷாப் என்ற பெயரைக் கொண்ட ஒரு அரங்கு உள்ளது.
இந்த அரங்கில் பழைய மிகப்பழைய கேமிராக்கள் இடம் பெற்றுள்ளன.பார்வையாளர்கள் ஒரு சிலர் ஆர்வத்துடன் தொடப்போகும் போது ஒரு குரல் தொடாதே தொடாமல் பாரு என்று எச்சரிக்கை செய்கிறது.

குரல் வந்த திசைப்பக்கம் பார்த்தால் கேமிராபை் போலவே வயதான ஒருவர் உட்கார்ந்திருந்தார், பெயர் என்.ஏ.வி.பிரசாத ராவ்.பல பழைய தமிழ் படங்களுக்கு ஸ்டில் போட்டோகிராபராக இருந்துள்ளார் பிறகு திருமணம் போன்ற விசேஷங்களுக்கு ஸ்டில் மற்றும் வீடியோகிராபராக இருந்துள்ளார்.அவரது கேமிரா அனுபவத்திற்கு மட்டுமே அறுபது வயதாகிறது அவருக்கு தற்போது எண்பது வயதாகிறது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் தான் உபயோகித்த கேமிராவை பாதுகாத்துவைத்திருக்கிறார் இப்போதும் அதைத்தன் உயிராக பாவிக்கிறார் எழுந்து நிற்க சிரமப்பட்டாலும் இந்த கேமிராவை எப்படி ஐயா இயக்குவது என்று கேட்டால் சிரமம் பார்க்காமல் எழுந்துவந்து விளக்கம் தருகிறார்.

எல்லாம் பழைய கேமிரா ஆனாலும் இப்போதும் இயங்கக்கூடிய நிலையில் சில கேமிராக்களை வைத்துள்ளேன் பிலிம் கிடைப்பது இல்லை ஆகவே இதற்கு வேலையில்லை ஆனாலும் இதைத் தொடும் போதெல்லாம் எனக்கு எல்லையில்லாத சந்தோஷம் ஏற்படுகிறது.

இப்போது டிஜிட்டல் கேமிரா வாங்கியவுடனேயே எல்லோரும் போட்டோகிராபர்கள் ஆகிவிடுகின்றனர் ஆனால் அது வளர்ந்த வரலாறு எப்படிப்பட்டது என்பதை தெரிந்து கொண்டால் இன்னும் சிறப்பாக படம் எடுப்பார்கள் என்பதால் நான் வருபவர்களுக்கு பழைய கேமிரா பற்றி சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று சொல்லும் பிரசாத்ராவை இன்று கண்காட்சிக்கு சென்றால் அவரையும் அவரது கேமிராக்களையும் பார்க்கலாம்.

எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X