வெங்கையாவுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு தமிழக காங்கிரசில் கடும் கொந்தளிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெங்கையாவுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு தமிழக காங்கிரசில் கடும் கொந்தளிப்பு

Added : ஜூலை 25, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, தன் ஆதரவு மாவட்ட தலைவர்களுடன், திருநாவுக்கரசர் சந்தித்து பேசியது, தமிழக காங்கிரஸ் கட்சியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.கடந்த, 22ம் தேதி, டில்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடந்தது. அதன்பின், தமிழக காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுலை தனித்தனியாக சந்தித்து வருகின்றனர்.அதற்காக, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர், 10 நாட்களாக, டில்லியில் முகாமிட்டுள்ளார்.அவர், ராகுலை தனியாக சந்திக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், எட்டு பேர், நேற்று முன்தினம் ராகுலை சந்தித்து பேசினர். எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பின்போது, தமிழக காங்கிரஸ் தலைவர், மேலிட பொறுப்பாளர் உடனிருக்க வேண்டும் என்பது, காங்கிரஸ் மரபு.அந்த அடிப்படையில், திருநாவுக்கரசர் உடனிருந்துள்ளார். அப்போது, ராகுலிடம் தனியாக பேச, திருநாவுக்கரசர் அனுமதி கேட்டதும், 'இன்னொரு முறை சந்திக்கலாம்' என, ராகுல் கூறி விட்டார்.இதனால், திருநாவுக்கரசர் அதிருப்தி அடைந்துஉள்ளார்.இதற்கிடையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, தன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் சிலருடன், திருநாவுக்கரசர், நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.இந்த சந்திப்பு, காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.தமிழக காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலர், எஸ்.டி.நெடுஞ்செழியன் வெளியிட்ட அறிக்கை:வெங்கையா நாயுடு, காங்கிரஸ் கட்சியையும், ராகுலையும், கடுமையாக விமர்சித்தவர். காங்கிரஸ் கட்சியின் தீவிர எதிர்ப்பாளர்.அவரை, எப்படி திருநாவுக்கரசர் சந்திக்கலாம்; இந்த சந்திப்பால், அவர், தலைவர் பதவிக்கான தகுதியை இழந்து விட்டார்.பழைய நண்பர் என்றாலும், தனிப்பட்ட முறையில், வெங்கையா நாயுடுவை சந்திக்கலாம்; ஆனால், கட்சியின் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகளை அழைத்து சென்று, அவரை சந்தித்ததும், அந்த புகைப்படத்தை, கட்சி சார்பில் வெளியிடுவதும், வேதனை அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இந்த சந்திப்பை விமர்சித்து, சமூக வலைதளங்களில், காங்கிரசார் நிறைய பதிவு செய்துள்ளளனர். அதன் விபரம்:* மாநில கட்சியான, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளராக இருந்த, திருநாவுக்கரசர், பதவி உயர்வு பெற்று, தேசிய கட்சியான, பா.ஜ., செய்தி தொடர்பாளராகியுள்ளார்* என்னையா இது, யாருமே கேட்பார் இல்லையா; திருநாவுக்கரசர், அ.தி.மு.க.,வா; பா.ஜ.,வா; காங்கிரசா?* கூடாராம் மாறுவது, திருநாவுக்கரசருக்கு ஒன்றும் புதிதல்ல; காற்று வேறு இடத்திற்கு மாறும்போது, சிறு துாசி,துரும்பையும் அடித்து செல்லும்.இவ்வாறு விமர்சித்துஉள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shekar Raghavan - muscat,ஓமன்
26-ஜூலை-201810:33:11 IST Report Abuse
Shekar Raghavan கல்லா காலி, கழண்டாத்தான் காசு ,பதவி புகழை பெறமுடியும்.. வாங்கயா என அழைப்பு கேட்டுது
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
26-ஜூலை-201808:34:53 IST Report Abuse
Srinivasan Kannaiya வெங்கு இங்கே வரமாட்டார்... ஆனால் அரசர் அங்கே போக சாத்தியக்கூறுகள் பிரகாசமாக உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
26-ஜூலை-201808:04:46 IST Report Abuse
Bhaskaran ஏற்கனவே திருநாவுக்கரசர் ஒருமுறை சொன்னது தான் நாங்களெல்லாம் சைபர்கள், எம்ஜியார் என்ற ஒன்றாம் எண்ணிற்கு அருகில் இருக்கும் போதுதான் எங்களுக்கு மதிப்பு என்று இந்த சைபர் எந்தக்கட்சியிடமும் போய் வொட்டிக் கொள்ளும் ஏற்கனவே பலதண்ணீர் குடித்தவர்தான் இவர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X