பின்வாங்கிய ராகுல்; திடீர் மாற்றம் ஏன்?| Dinamalar

பின்வாங்கிய ராகுல்; திடீர் மாற்றம் ஏன்?

Added : ஜூலை 26, 2018 | கருத்துகள் (90)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி : வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க ஆர்.எஸ்.எஸ்., பின்னணி இல்லாத எந்த ஒரு நபரையும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயார் என காங்., தெரிவித்துள்ளது. ராகுல் பிரதமர் வேட்பாளராக இருப்பார் என எதிர்பார்த்த நிலையில், அவரது இந்த திடீர் மாற்றத்துக்கு மோடியின் அதிரடியே காரணம் என தெரிய வந்துள்ளது.


விளம்பரம் தேடிய ராகுல்:

லோக்சபாவில், தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை, காங்., ஆதரித்தது. அப்போது, மிக ஆவேசமாக பேசிய, காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடியையும், அவர் தலைமையிலான, மத்திய அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக சாடினார். இதையடுத்து, மோடியை கட்டித் தழுவிய அவர், அதன் மூலம் விளம்பரம் தேடும் முயற்சியிலும் ஈடுபட்டார்.


சரமாரியாக பதில்:

அதன் பின், சபையில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்து, அனைவரையும் வாயடைக்க செய்தார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அரசின் சாதனைகளை, மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு முறை கொண்டு செல்ல, தனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகவே அவர் பயன்படுத்தினார். மோடியின் இந்த அதிரடியால் தான், பிரதமர் பதவி விவகாரத்தில், காங்கிரஸ் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (90)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sahayam - cHENNAI,இந்தியா
26-ஜூலை-201819:45:19 IST Report Abuse
Sahayam மோடி சொன்னதை கேட்டோம. ஒரு கேள்விக்கு கூட பதில் கிடையாது அவரிடம்
Rate this:
Share this comment
Azhagan Azhagan - Chennai,இந்தியா
14-ஆக-201810:56:46 IST Report Abuse
Azhagan Azhaganகேனத்தனமான கேள்விக்கு கிறுக்கன் கூட பதில் சொல்லமாட்டான்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
26-ஜூலை-201815:56:43 IST Report Abuse
இந்தியன் kumar தன் நம்பிக்கை இல்லாத ராகுல் எதை சாதிக்க போகிறார்? , மோடிஜி என்கிற சிங்கத்தை வீழ்த்த வேண்டும் என நினைக்கிறாரே தவிர தன்னை சிங்கமாக காட்டாமல் ஒரு மாடாகவே காட்டி கொள்கிறார் . மாடுகளுக்குள் ஒற்றுமை கிடையாது பிறகு எப்படி சிங்கத்தை வீழ்த்த முடியும் ??
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
26-ஜூலை-201813:34:14 IST Report Abuse
தமிழர்நீதி சபையில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்து, அனைவரையும் வாயடைக்க செய்தார். மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை, அரசின் சாதனைகளை, மக்கள் மத்தியில் மீண்டும் ஒரு முறை கொண்டு செல்ல, தனக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாகவே அவர் பயன்படுத்தினார். சிவசேனா வேறுமாதிரி சொல்லிச்சு . ராகுல் பேச்சை மிகவும் பாராட்டியது . அப்புறம் ராகுல் கேட்ட எட்டு கேள்விக்கும் மோடி பதில் சொல்லவில்லை , இல்லை அதிகாரிகள் பதில் மோடிக்கு எழுதி கொடுக்கல . ராகுல் துவைச்சு காயப்போட்டுட்டுதான் வந்தார் .காயப்பட்ட மோடி இன்னும் கட்டுபோட்டுக்கிட்டு ஆஸ்பத்திரியில்தானிருக்கார் .பதவி ஆசை மோடி மாதிரி காங்கிரஸுக்கு கிடையாது . மோடி இன்னும் பிரதமராக தொடர்ந்தால் குஜராத் தவிர்த்து அத்தனை மாநிலமக்களும் பிரிந்துபோகும் . மோடி வீட்டுக்கு போனால் இந்தியா சேர்த்திருக்கும் , இல்லை பிரிவினையால் தேசம் தூண்டப்படும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X