மனச்சுமையை காட்டிக் கொடுக்கும் வியர்வை!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மனச்சுமையை காட்டிக் கொடுக்கும் வியர்வை!

Added : ஜூலை 26, 2018
Advertisement
மனச்சுமையை காட்டிக் கொடுக்கும் வியர்வை!

ஒருவருக்கு உடம்புக்கு எப்படி இருக்கிறது என்பதை அறியப் போதுமான தகவல்கள் அவரது வியர்வையிலேயே இருக்கிறது. இதனால்தான், நீரிழிவு முதல் பல நோய்களை கண்டுபிடிக்க புதுப்புது மின்னணு உணரிகளை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
சரி, மன நலத்தை அறிய வியர்வை உதவுமா? உதவும் என்கின்றனர், ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.
உதாரணத்திற்கு, கவலைகளால் ஏற்படும் மனச் சுமை உடல் நலத்தையும் பாதிக்கிறது. மனச் சுமை அதிகமுள்ளவர்களது ரத்தத்தில், 'கார்டிசால்' என்ற ஹார்மோன் கூடுதலாக இருக்கும். அது வியர்வையிலும் வெளிப்படும்.
எனவே, ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள், வியர்வையில் கார்டிசாலை அளக்கும் உணரியை அண்மையில் கண்டுபிடித்துள்ளனர்.
கார்டிசால் உணரிகள் உள்ள பட்டையை, ஸ்டிக்கர் போல தோலில் ஒட்டிக்கொண்டால் போதும். அது தொடர்ந்து வியர்வையில் கார்டிசாலை அளந்து சொல்லும்.
இந்த தகவலை வைத்து நாள் முழுவதும் ஒருவரது மனச் சுமை எந்த அளவுக்கு இருந்தது என்பதை மருத்துவர்களால் கணக்கிட்டு விட முடியும். மருத்துவர்களும், மன நல மருத்துவர்களும் ஒரு நோயாளியை முழுவதுமாக அறிய கார்டிசால் உணரிகள் உதவும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X