'மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம்': சபரிமலை வழக்கில் எச்சரிக்கை Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம்'
சபரிமலை வழக்கில் எச்சரிக்கை

புதுடில்லி:''காலம் காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறைக்கு எதிராக, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதித்தால், மீண்டும் ஒரு அயோத்தி சம்பவம் நடக்க வாய்ப்புள்ளது,'' என, க் ஷேத்ர சம்ரக் ஷண சமிதி, உச்ச நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்துஉள்ளது.

மீண்டும்,அயோத்தி,சம்பவம்,சபரிமலை,வழக்கில்,எச்சரிக்கை


கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதிற்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவது கிடையாது.

நீண்ட காலமாக, தேவஸ்தானம் கடைபிடித்து வரும் இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவிலில் பெண்களை அனுமதிக்கக் கோரியும்,

இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கியஅமர்வு விசாரித்து வருகிறது.

வழக்கின் நேற்றைய விசாரணையின் போது, சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து, க் ஷேத்ர சம்ரக் ஷண சமிதி சார்பில், வழக் கறிஞர் கைலாசநாத பிள்ளை வாதிட்டதாவது:சபரிமலை அய்யப்பன் கோவிலில், குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பது கிடையாது என்ற நடைமுறை, காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறையில் குறுக்கீடு ஏதும் ஏற்பட்டால், அது, இன்னும் ஒரு அயோத்தி சம்பவத்திற்கு வழி வகுக்கும். இதனால், கேரளாவில் அமைதி சீர்குலையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ''அய்யப்பன் கோவில் பொது மக்களுக்கானது என்றால், அதில் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அரசியல்

Advertisement

அமைப்பு சட்டத்தின் படி, அனைத்து நடை முறைகளும் பின்பற்றப்பட வேண்டும்,'என்றார்.

அதற்கு பதில் அளித்த, 'பியூபில் ஆப் தர்மா' அமைப்பின் சார்பில் வாதிட்ட, வழக்கறிஞர் சாய் தீபக், ''அய்யப்ப பக்தர்கள் தங்களுக்கென ஒரு வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர். ''தற்போது, அதில் குறுக்கிடுவது, அவர்களின் உரிமையில் தலையிடுவது போன்றதாகும்,' என்றார்.

மேலும், ''பெண்களுக்கு மாத விலக்கு ஏற்படுவதை, அசுத்தம் என நாங் கள் கூறவில்லை. அசாம் மாநிலம் காமக்யா கோவிலில், முக்கிய வழிபாடு நடப்பதே, பெண் தெய்வத்திற்கு தான்,'' என்றார்.இத்துடன், நேற்றைய விசாரணை நிறைவடைந்தது.


Advertisement

வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜூலை-201820:42:40 IST Report Abuse

r.sundaramநம்பிக்கை, நம்பிக்கை அதுதான் ஆதாரம். அயோத்தி ராமர் கோவில் விஷயத்தில் கூட இந்துக்களின் நம்பிக்கைதான் அங்கு ராமர் பிறந்தார் என்பது. இதை மாற்ற முடியுமா? அதுபோல் சபரிமலையில் வயதுப்பெண்கள் சபரிமலைக்கு வருவது அந்த அய்யப்ப ஸ்வாமிக்கு இஷ்டமில்லை என்பதும் ஒரு நம்பிக்கை தான், ஒரு மதத்தின் நம்பிக்கையின் மேல் கேள்வி கேட்க உச்சநீதிமன்றத்துக்கு கூட உரிமை கிடையாது.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
27-ஜூலை-201820:38:36 IST Report Abuse

r.sundaramநாம் நமது நாட்டில் நமது வழிபாட்டு முறைகளை கடைபிடிக்க முடியவில்லை என்றால் சாவதை தவிர எங்களுக்கு வேறே ஒன்றும் தெரியாது. அவ்வாறு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பு வந்தால் நாம் அனைவரும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து நமது ஒற்றுமையை காண்பிப்போம். மக்கள் இல்லாத நாட்டில் உச்சநீதிமன்றம் மட்டும் இருக்கட்டும்.

Rate this:
San - Madurai ,இந்தியா
27-ஜூலை-201815:44:06 IST Report Abuse

SanTime for unity (Hindus)

Rate this:
மேலும் 45 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X