karunanithi | சந்தனக் கிண்ணம் மாயம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சந்தனக் கிண்ணம் மாயம்

Added : ஜூலை 27, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கருணாநிதி, மாணவர் சம்மேளனம், Karunanithi

முதலில் "மாணவர் சம்மேளனம்' என்ற அமைப்பைத் துவக்கிய கருணாநிதி பின்னர் அதைக்கலைத்து விட்டு “தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றத்தை ஏற்படுத்தினார். அதன் ஆண்டு விழாவுக்கு அழைக்கப்பட்டவர்களை வழி அனுப்ப கையில் காசு இல்லாததால் தனது வீட்டில் தனக்கென போடப்பட்ட தங்கச் சங்கிலியை பாங்கில் ஈடு வைத்து 50 ரூபாய் வாங்கி சொற்பொழி வாளர்களை ஊருக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அதை மீட்க முடியாமல் விற்று மிச்சப்பட்ட ரூபாயில் நண்பர்களுடன் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு சினிமாவுக்கு சென்றார். ஆனால் இவரது தாயார் மட்டும் அடிக்கடி இவரது கையைத் தொட்டுப்பார்த்து "எங்கய்யாவுக்கு வெறுங்கையா இருக்கே' என்று கூறி மனம் நொந்து போவார்.

இதேபோல் பின்னர் மனைவி பத்மாவின் மனம் கோணுமாறும் ஒருமுறை இவர் திருட நேர்ந்தது.மாணவர் மன்றத்தின் சார்பாக நடந்த பொதுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட ஜனார்த்தனத்தை வழி அனுப்ப பணம் இல்லாததால் மனைவிக்கு திருமணத்தின் போது பரிசாக வந்திருந்த சந்தனக் கிண்ணத்தை ஒளித்தவாறு எடுத்து அதை வைத்துப்பணம் வாங்கி ஜனார்த்தனத்தை அனுப்பி வைத்தார். சந்தன கிண்ணம் காணாமல் போனதற்காக இவரது மனைவியை மற்றவர்கள் குறை கூறியபோது இவர் மனதுக்குள் வருத்தப்படுவார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
25-ஆக-201809:20:32 IST Report Abuse
krish விளையும் பயிர் முளையிலே தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Dammam,சவுதி அரேபியா
14-ஆக-201818:11:18 IST Report Abuse
Raja ஒரு ஊழல் வழக்கிலும் கைது செய்ய படல. ஆனால் இவர் ஊழல்வாதி. இவருடைய குடும்பத்தாரின் சொத்து பல ஆயிரம் கோடிகள் (ஆசியாவிலேயே NO 1 ) என்று எல்லோரும் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் மீது (கனிமொழி தவிர) வழக்கு பதிய யாரும் முன் வருவது இல்லை, ஒரு வருமான வரி சோதனை கூட நடத்த பட வில்லை. இவர் மீது குற்றம் சுமத்துபவர்கள் இதன் மர்மத்தை விளக்க வேண்டும். ஊழலை ஒழிக்க பிறந்த மோடி அவர்கள் கூட இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அப்படி என்றால் ஒன்று இவர்கள் நல்லவர்கள், இல்லை என்றால் அவர்களும் இவர்களுடன் கை கோர்த்துள்ளார். இதில் எது சரி என்று அவரவர் தீர்மானித்து கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
10-ஆக-201805:54:35 IST Report Abuse
meenakshisundaram ஆமாம் ,தேசியக்கொடியை யார் மேல் போர்த்துவது என்று இல்லையா? அது மிக பவித்ரமானது ,அசிங்க படாமல் காப்பாற்றப்பட வேண்டியது அல்லவா? இலங்கையிலிருந்து திரும்பி வந்த இந்தியா ராணுவத்தினரை அவமதித்த இவருக்கு ராணுவ மரியாதை கொடுக்கலாமா?சரியா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X