கோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்| Dinamalar

கோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்

Added : ஜூலை 29, 2018
Advertisement
கோலிவுட் ரங்கோலி : அனுஷா நாயார்

கெஞ்சும் சலங்கை பாதங்களில் கொஞ்சிட... அசைவுகள் அந்த மயிலை மிஞ்சிட... மாயாஜாலம் காட்டும் மை விழிகள், பார்த்தாலே இனிக்கும் இதழ் துளிகள்... என அழகிய நடிப்பால் திரைகளத்தை கலக்கிட கோலிவுட்டில் களமிறங்கிய அழகிய ரங்கோலி நடிகை அனுஷா நாயர் புன்னகை பூக்க பேசியதிலிருந்து...
* அனுஷா அறிமுகம்...எனக்கு சொந்த ஊர் கேரளா; தற்போது பெங்களூருவில் இருக்கிறேன். பரத நாட்டியம், மாடலிங் துறையில் இருந்த போது இயக்குனர் குகனின் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானேன்.

* மலையாளத்தில் நடித்தது?பகத்பாசில், ஆன்ட்ரியா நடித்த 'அன்னயும் ரசூலும்' படத்தில் சின்ன கேரக்டரில் நடித்து இருக்கிறேன். தமிழில் அடுத்த படம்....கிராமத்து கதைக்களம் கொண்ட பெரிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். 'சண்டைக் கோழி 2' படத்தில் நடிக்கும் சரத் தான் ஹீரோ. படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

* பெயரில்லா படத்தின் கதை ?இது குடும்ப பின்னணியில் பெண்களை மையமாக கொண்ட 'பக்கா' கிராமத்து படம். பொதுவாக நடக்கும் ஒரு விஷயத்தை திரையில் பதிவு செய்யும் படம். 'மெயின்' கதையெல்லாம் ரகசியமாக வைத்திருக்கனும்னு இயக்குனர் சிபு சேகர் சொல்லிட்டாரு.

* உங்கள் கேரக்டர்?கதைக்களமே கிராமமாக இருக்கும் போது என் கேரக்டரும் கிராமத்து பெண்ணாக தானே இருக்க வேண்டும். காதல், கோபம், வீரம் என நடிப்பை அதிகம் வெளிப்படுத்தும் கேரக்டர் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது.

* கிராமத்தில் நீங்கள் கற்றது?தேவகோட்டையில் அதிகம் படப்பிடிப்பு நடந்தது. காலணி இல்லாமல் வயல்வெளிகளில் நடந்த போது தான் விவசாயிகளின் கஷ்டம் தெரிந்தது. ஆடு, மாடு எல்லாம் கூட மேய்க்க கத்துகிட்டேன்.

* கோலம் போட தெரியுமா?ரங்கோலி கோலம் போடுவதில் நான் கில்லாடி, கேரளா அத்தப்பூ கோலம் எல்லாம் எனக்கு அத்துப்படி.

* பரதத்தில் ஹோம்லி, நடிப்பில் கிளாமர்?இதெல்லாம் பார்த்தால் நடிக்கவே முடியாது, ஒரு நடிகை எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும். பரதம் ஆடும் பெண் ஏன் 'கிளாமராக' நடிக்க கூடாதா, அதற்கான எல்லையை மீறாமல் இருந்தால் போதும். இன்று பரதநாட்டிய 'காஸ்டியூம்'கள் கூட மாடர்னாக மாறிவிட்டதே...

* கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு?கேரளாவின் இயற்கை சூழல், பெங்களூரு மல்ட்டி கல்ச்சர், தமிழ்நாட்டின் பாசக்கார மக்கள்... எனக்கு மூன்று மாநிலங்களும் ரொம்பவே பிடிக்கும்.

* கிராமத்து வாழ்க்கை?கிராமத்து மக்கள் மரியாதை கொடுக்க தெரிஞ்சவங்க. படப்படிப்பில் இருந்த போது வீட்டிற்கு அழைத்து விருந்தெல்லாம் கொடுத்தாங்க. அருமையான மக்கள் வசிக்கும் கிராமம் முன்னேறாமல் இருப்பது தான் கஷ்டமா இருக்கு. கிராமங்களில் 'துாய்மை இந்தியா', 'டிஜிட்டல் இந்தியா' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை என்னை மாதிரி நகரத்து வாசிகளுக்கு நிறையவே இருக்கு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X