கருணாநிதி உடல் நிலை குறித்த தகவலால் பரபரப்பு: தொண்டர்கள் பதட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதி உடல் நிலை குறித்த தகவலால் பரபரப்பு: தொண்டர்கள் பதட்டம்

Updated : ஜூலை 30, 2018 | Added : ஜூலை 29, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு தற்காலிகமாக சிறிது பின்னடைவு ஏற்பட்டது. அது மருத்துவர்களின் தீவிர முயற்சியால் உடல் நிலை சீரானது என ஆ.ராசா தெரிவித்தார்.


சீராகி வருகிறது


தி.மு.க தலைவர் கருணாநிதியில் உடல்நிலை சீராகி வருகிறது என காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளயிட்டுள்ளது. கருணாநிதியில் உடல் நிலை தொடர்ந்து மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.


போலீஸ் குவிப்பு


இந்நிலையில் மாநிலம் முழுவதிலும் இருந்து வந்திருந்த தி.மு.க., தொண்டர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்த தகவலை கேட்டறிவதற்காக காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான குவிந்தனர். அவர்களை கட்டுப்படுத்தும் விதமாக மருத்துவமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோபாலபுரம் பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சென்னை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவமனைக்கு போலீஸ் அதிகாரிகள் விரைவு

மயிலாப்பூர் துணை ஆணையர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும் சென்னை நகர துணை ஆணையர்கள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அனைத்து ஆயுதப்படை காவலர்களும் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.



லேசான தடியடி

கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்ற தகவலை தொடர்ந்து தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். மேலும் தொண்டர்கள் கலைந்து செல்லுமாறு ராசாவும் தெரிவித்தனர் இதனிடையே தொண்டர்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
30-ஜூலை-201810:12:10 IST Report Abuse
mohan தமிழ் நாடு எப்பொழுது திருந்த போகிறது .....
Rate this:
Share this comment
Cancel
raghavan - Srirangam, Trichy,இந்தியா
30-ஜூலை-201808:32:31 IST Report Abuse
raghavan ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று சொல்லி எழுபத்தைந்து நாட்களை ஓட்டுங்கள், எல்லோருக்கும் அலுத்து போய்விடும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30-ஜூலை-201808:04:36 IST Report Abuse
Srinivasan Kannaiya அடிக்கடி " தற்காலிக பின்னடைவு " வரக்கூடாது... சிங்கிங்கோ..........
Rate this:
Share this comment
30-ஜூலை-201812:20:26 IST Report Abuse
ARUNACHALAM, Chennaisinking இல்லை. மிதக்கும் கலை அவருக்கு கைவந்தது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X