theni | கடைசி படிக்கட்டில் உதயகீர்த்திகா| Dinamalar

கடைசி படிக்கட்டில் உதயகீர்த்திகா

Updated : ஜூலை 30, 2018 | Added : ஜூலை 30, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement


ஒரு ஏழை பெயிண்டரின் மகளான உதயகீர்த்திகா விண்வெளி விஞ்ஞானியாகும் கனவுடன் உக்ரைன் நாட்டில் படித்துவருகிறார் நல்லவர்கள் உதவியால் நான்கு வருட படிப்பில் மூன்று வருட படிப்பை முடித்துவிட்டார் நான்காவது ஆண்டு படிப்பை படித்து முடிக்க உதவி கேட்டு நிற்கிறார் அவரது கதை இதோ...

தேனியைச் சேர்ந்தவர் தமோதரன் கடைகளுக்கு விளம்பர போர்டு எழுதுவதன் மூலம் வரும் வருமானத்தில் மனைவி அமுதா மகள் உதயகீர்த்திகாவுடன் மாதம் 2500 ரூபாய் வாடகை வீட்டில் வாழ்க்கையை நடத்திருவருபவர்.


இவ்வளவு சிரமத்திலும் தன் மகள் உதயகீர்த்திகாவை நன்றாக படிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் படிக்கவைத்தார்.

எல்லா மகள்களும் டாக்டருக்கும், என்ஜீயருக்கும், ஐஏஎஸ்க்கும் படிப்பேன் என்று சொல்லிக்கொண்டிருந்த போது தமோதரனின் மகள் மட்டும், நான் விண்வெளி ஆராய்ச்சி படிப்பு படிக்க போகிறேன்.ஒரு ராக்கெட் விஞ்ஞானியாக, விண்வௌி ஆய்வாளராக வருவேன் என்றுதான் சிறுவயது முதலே சொல்லிக்கொண்டு இருப்பார்.இந்த துறையில் சாதித்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், சுனிதா வில்லியம்ஸ், கல்பனா சாவ்லா போல தானும் சாதிக்கவேண்டும் என்பதுதான் இவரது கனவு.

எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இது தொடர்பான புத்தகங்களைத்தான் தேடித்தேடி படிப்பார். மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பாக மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முறையும், பிளஸ் டூ படிக்கும் போது ஒரு முறையும் ஆக இரண்டு முறை முதல் பரிசினை பெற்றார்.

இதன் காரணமாக சிறப்பு விருந்தினராக பெங்களூரு உள்ளீட்ட பல்வேறு விண்வௌி ஆராய்ச்சி கூடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அந்த இடங்களை சுற்றிப்பார்த்ததும், அங்குள்ள விஞ்ஞானிகளை சந்தித்து பேசியதும் இவருக்குள் இருந்த விண்வௌி விஞ்ஞானிக்கான கனவை மேலும் துாண்டிவிட்டது.


பிளஸ் டூ முடித்த கையோடு விண்வெளி தொடர்பான படிப்பு படிக்க உலகில் சிறந்த இடம் எது என்று தேடியதில் கிழக்கு ஐரோப்பியவில் ரஷ்யாவிற்கு அருகில் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் யூனிவர்சிட்டிதான் சிறந்தது என்பது தெரியவந்தது.

அங்கு இடம் கிடைப்பது சிரமம் என்ற நிலையில் இவர் ஒன்றுக்கு இரண்டாக இஸ்ரோவில் வாங்கிய இஸ்ரோ சான்றிதழ் இவருக்கான இடத்தை பெற்றுத்தந்தது. 'என்ஜீனிரிங் இன் ஏர்போர்ஸ்' என்பது நான்கு வருட படிப்பு. முதல் வருடம் எட்டு லட்சமாகும் பிறகு அடுத்தடுத்த வருடங்களுக்கு நான்கு லட்சமாகும் என்ற கட்டண விவரமும் கிடைத்தது.


இத்தனை லட்சத்திற்கு எத்தனை சைபர் என்று கூட தெரியாத தாமோதரன் முதலில் திகைத்துப்போனாலும், உலகில் எவ்வளவோ நல்லவர்கள் இருக்கிறார்கள் படிப்பதற்கான உதவித்தொகையினை கேட்டுப்பார்ப்போம் என்று ஊரில் உள்ள நல்லவர்களை தேடிக் கிளம்பிவிட்டார்.

பல நாட்கள் அலைந்ததில் பல்வேறு அமைப்புகள் தனி நபர்கள் நன்கொடையாக வழங்கியதில் முதல் வருட படிப்பிற்கு தேவையான எட்டு லட்சம் கிடைத்துவிட்டது.


மகள் உதயகீர்த்திகாவை ஆசீர்வாதித்து உக்ரைனுக்கு அனுப்பிவைத்தார்.

முதல் வருட படிப்பு முடிவதற்குள் உதய கீர்த்திகா பல்கலை நிர்வாகத்திடம் சிறந்த மாணவி என்று பெயரை எடுத்துள்ளார்.ரஷ்ய மொழி தெரிந்தால் இன்னும் வேகமாக முன்னேறலாம் என்பதால் கிடைத்த நேரத்தை வீணடிக்காது ரஷ்ய மொழி கற்றுக்கொண்டுவிட்டார். தனது படிப்பு செலவில் பலரது பத்து ரூபாய் கூட நன்கொடையாக கலந்து இருக்கிறது என்பதை உணர்ந்ததால் விடுதியிலேயே சமைத்து சாப்பிட்டு மெஸ் பில்லையும் குறைத்துக்கொண்டுள்ளார்.இரண்டாம் ஆண்டு படிப்பிற்கான செலவிற்கு தாமேதாரன் மலைத்து நின்ற போது உதயகீர்த்திகாவைப்பற்றி 2016 ம் ஆண்டு நிஜக்கதை பகுதியில் எழுதினேன் பலரும் உதவியதில் இரண்டாவது ஆண்டு மட்டுமின்றி மூன்றாவது வருட படிப்பையும் படித்து முடித்தார்.

இதோ இன்னும் ஒரு வருட படிப்பு இருக்கிறது வின்வெளி விஞ்ஞானியாகும் கனவின் கடைசி படிக்கட்டில் உதயகீர்த்திகா இருக்கிறார் முக்கால் கிணறு தாண்டிவிட்டார் இன்னும் இருபது நாட்களில் நான்காவது வருட படிப்பை படிக்க உக்ரைன் பறக்கவேண்டும் அதற்குள் தேவைப்படும் பணத்தை புரட்டவேண்டும் நிஜக்கதை வாசகர்களை திரும்பவும் சிரமப்படு்த்த வேண்டாம் என்றுதான் நினைத்தேன் ஆனால் முடியவில்லை சார் என்றபடி தனது மகளுடன் அலுவலகம் வந்து முறையிட்டார் உங்கள் கோரிக்கையை மறுபடியும் வாசகர்களிடம் கொண்டு போகிறேன் நல்லதே நடக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் அவர்களையும் அனுப்பிவைத்தேன்.நல்லதே நடக்கட்டும்.

உதவ நினைப்பவர்கள் தொடர்பு கொள்ள தாமோதரன் எண்:96268 50509,மற்றும் உதயகீர்த்திகாவின் எண்:8148388702.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Udhayakeerthika keerthika - Tamilnadu,இந்தியா
31-ஜூலை-201814:57:26 IST Report Abuse
Udhayakeerthika keerthika விளக்கம் தருகிறேன் ஐயா.. நான் உதய கீர்த்திகா... நான் பயிலும் பல்கலைக்கழகம் உலக அளவில் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வடிவமைத்து தயாரிப்பதில் பழமையான மிகவும் அனுபவமிக்க பல்கலைக்கழகம். எனவே இங்கு படித்து பெறும் பட்டத்திற்கு இந்தியாவிலும் உலகின் பல நாடுகளிலும் மிகுந்த முக்கியத்துவமும் முன்னுரிமையும் வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. மேலும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் நான் பரிசு பெற சென்ற போது எனக்கு பரிசுவழங்கிய விஞ்ஞானிகள் கூறியததாவது... இதே படிப்பை இந்தியாவில் படிக்க என்னுடைய தமிழ் வழிகல்வியும் முக்கிய நகர்புறங்களில் பயிலாமையும் மற்றும் தகுதி தேர்வுகளுக்கு தகுந்த பயிற்சி கிடையாமையும் பெரிய தடைகள் என்றும் இங்கு விட நான் பயிலும் பல்கலைக்கழகம் மிகச்சிறந்தது எனறும் ஆலோசனைகள் கூறினர்
Rate this:
Share this comment
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
30-ஜூலை-201818:34:12 IST Report Abuse
tamilvanan புரியும்படி இல்லை. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர், இஸ்ரோ பரிசு பெற்றவர் என்றால், ஏன் நம்மூரில் இருக்கும் ஐ ஐ டி எம் ஐ டி மற்றும் உள்ள பல பொறி இயல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கக்கூடாது? ஏன் உக்ரேன் நாட்டுக்கு இவளவு செலவு செய்து படிக்கவேண்டும்? இப்போது ஏன் உதவி கேட்க வேண்டும்? இந்த பட்டம் நம்மூரில் செல்லாது. படிப்புக்கு பிறகு அங்கேயே தங்க வேண்டும். அங்கே வேலை கிடைப்பது அரிது. ஒன்றும் விளங்கவில்லை அய்யா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X