நல்ல காகிதம் செய்வோம்; இன்று காகித தினம்| Dinamalar

நல்ல காகிதம் செய்வோம்; இன்று காகித தினம்

Added : ஜூலை 31, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 நல்ல காகிதம் செய்வோம்; இன்று காகித தினம்

'ஆயுதம் செய்வோம் நல்ல காதிகம் செய்வோம்ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம்' என ஆயுதத்திற்கு சமமாக காகிதத்தைக் கூறுகிறார் பாரதியார்.காப்பதற்கு ஆயுதம்கற்பதற்கு காகிதம் புத்தகம்- அதுதொட்டுப் பார்த்தால் காகிதம்ஆனால் சமூக மாற்றங்களின் ஆயுதம்'உண்மையில் வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் நிறைய பேருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும்தான் புரட்சிக்கே வித்திட்டிருக்கின்றன. அன்று முதல் இன்று வரை கல்வி, கருத்து, கண்டுபிடிப்பு மற்றும் செய்திகளை உலகத்தில் அனைவருக்கும் எடுத்துச் செல்லும் சாதனமாக காகிதம் இருந்து வருகிறது.சீனாவில் 2 ம் நுாற்றாண்டிலிருந்து காகிதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவில் 'சாய்லுான்' காகதித்தை உருவாக்கினார். கி.பி., 8 ம் நுாற்றாண்டில் அரேபியர்கள் சீனாவில் மீது படையெடுத்து வென்றனர். அப்பொழுது அரேபியர்கள் காகித உற்பத்தி கலையை கொண்டு சென்றனர். அவர்களிடமிருந்து கற்ற ஐரோப்பியர்கள் காகித கலையை உலகம் முழுவதும் பரப்பினர்.


தகவல் பரிமாற்றம்


முதன் முதலாக கடிதங்கள், செய்தித்தாள்கள், புத்தகங்கள் இவற்றின் மூலம் எளிதான தகவல் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது காகிதம். காலையில் கண் விழித்தவுடன் தேடுகின்ற செய்தித்தாளில் இருந்து, நாள் துவங்குகின்ற நாட்காட்டி உள்பட துங்குவதற்கு முன்பு படிக்கின்ற வார இதழ்கள் வரை, பிறப்புச் சான்று முதல் இறப்புச் சான்று வரை, ஆரம்பப்பள்ளியில் இருந்து கல்லுாரி வரை, பாண்ட் பேப்பர் முதல் டிஸ்யூ பேப்பர் வரை, கல்யாணம் முதல் காதுகுத்து அழைப்பிதழ்கள் வரை, பெட்டிக்கடையில் இருந்து பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை, பேப்பர் பயன்பாடு இல்லாத இடமே இல்லை. காகித உபயோகம் அன்று முதல் இன்று வரை நம் தினசரி வாழ்வில் இரண்டற கலந்து விட்ட ஒரு பொருள். இதன் பயன்பாடு இல்லாமல் ஒரு நாளைக் கூட நம்மால் கடக்க முடியாது.பகவத் கீதை , பைபிள், குர்ஆன், உலகப் பொதுமறை திருக்குறள் என புனித நுால்கள் அனைத்தும் காகித வடிவில்தான் நாம் பார்க்கிறோம். எனவே காகிதம் கற்க, கற்பிக்க உதவுகின்ற தத்துவங்கள் எடுத்துச் செல்கின்ற, மனிதனை பண்படுத்துகின்ற, உபன்யாசங்கள் எடுத்துச் சொல்கின்ற ,ஒரு புனிதமான பொருள். இது எல்லா வகையிலும் நமக்கு நன்மை தரக்கூடியதே. மனிதனின் புத்தக வாசிப்பிற்கும், எலக்ட்ரானிக் திரைகளில் வாசிப்பிற்கும் வித்தியாசம் உள்ளன. புத்தக வாசிப்பில் எந்தவித பாதிப்பும் இல்லை. புத்தக வாசிப்பு ஞாபக சக்தியை வளர்க்கிறது. புத்தக வாசிப்பு நமது ஆயுளை கூட்டுகிறது என்கிறது ஹார்வர்டு பல்கலை ஆய்வு. புத்தகங்களை படிக்கும் , எழுதிப்பார்க்கும் மாணவர்களின் கையெழுத்து திறன் மற்றும் படைப்பு அறிவு திறன் மிகவும் நன்றாக உள்ளது.


மறுசுழற்சிகாகிதம் 100 சதவீதம் சுற்றுச் சூழலுக்கு உகந்தது. மறு சுழற்சிக்கு ஏதுவானது. எளிதில் மக்கும் தன்மை உடையது. காகித்தைப் பற்றிய சில தவறான செய்திகளையும், உண்மைக்குப் புறம்பான வதந்திகளையும் பரப்புகின்றனர். உதாரணமாக இயற்கை வளங்களை அழித்து காகிதம் தயாரிக்கப்படுகிறது என்கின்றனர்.இந்தியாவில் 46 சதவீதம் காகிதத் தயாரிப்பு பழைய காகிதத்திலிருந்து மறு சுழற்சி செய்யப்பட்டு தயாரிக்கப்படுகிறது. மேலும் 29 சதவீதம் விவசாய கழிவுகளிலிருந்து (வைக்கோல், கரும்புச்சக்கை, கோதுமை மற்றும் சோளத் தட்டை) தயாரிக்கப்படுகிறது. 25 சதவீதம் விவசாய மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து பேப்பர் மில்களின் கூட்டமைப்புகளும் , அனைத்து இந்திய காகித வியாபாரிகள் சங்கமும் சேர்ந்து 2017 ஏப்., 12 ல் ஒரு முடிவு எடுத்தனர். அதன்படி ஒவ்வொரு வருடமும் ஆக., 1 ல் காகித தினம் கொண்டாடப்படுகிறது. 1959 ல் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரி ஆலோசனைப்படி மும்பையில் தொடங்கப்பட்ட இச்சங்கம், இந்திய முழுவதும் 35 கிளைகளுடன் மிகச் சிறப்பாக இயங்கி வரும் அமைப்பாகும்.


உற்பத்தி அதிகரிப்புபேப்பர் டெல்ஸ் என்று அழைக்கப்படும் கைவினைப் பேப்பர் நிறுவனம் பூனாவில் உள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் கைவினைப் பேப்பர் தொழிற்சாலை. மகாத்மா காந்தியின் ஆலோசனைப் படி பூனாவைச் சேர்ந்த விஞ்ஞானி கே.பி.ஜோஷி இதை துவக்கி வைத்து நிர்வகித்தார். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகல் இங்கு தயாரிக்கப்பட்ட காகித்தில் தான் எழுதப்பட்டது. முன்னாள் பிரதமர் இந்திரா திருமண அழைப்பிதழ்கள் இங்கு தயாரிக்கப்பட்டவையே.ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் காகிதங்களில் 50 சதவீதம் மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்படுகிறது. மேலும் இங்கு 70.4 சதவீதம் பயன்படுத்தப்பட்ட காகிதங்கள் மறு சுழற்சிக்கு வருகின்றன. ஆனால் இந்தியாவில் இந்த உபயோகப்படுத்தப்பட்ட காகிதங்களை கையாளும் முறை மோசமாக உள்ளது. இந்தியாவில் 20 முதல் 25 சதவீதம் வரை மட்டுமே மறு சுழற்சிக்கு வருகின்றன. மற்ற நாடுகளோடு ஒப்பிடும் பொழுது இது மிகவும் குறைவு. இதை உயர்த்துவதற்கான முயற்சிகளை மில் அதிபர்களும், அரசும் சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் காகித உற்பத்தியை இன்னும் அதிகரிக்கலாம்.


பயன்பாடு


இதேபோல் தனிநபர் காகிதம் பயன்பாடு இந்தியாவில் மிகக் குறைவு. அதாவது வெறும் 13 கிலோ அளவில்தான் உள்ளது. ஆனால் எலக்ட்ரானிக் உபகரணங்களை அதிகம் உபயோகிக்கும் அமெரிக்காவின் தனி நபர் காகிதம் பயன்பாடு 229 கிலோ. சீனாவில் தனிநபர் காகிதம் பயன்பாடு 74 சதவீதம். உலக சராசரி தனி நப ரக காகித பயன்பாடு 57 சதவீதம்.எனவே நாம் இன்னும் காகிதப் பயன்பாட்டை அதிகமாக்க வேண்டும். உபயோகிக்கப்பட்ட காகிதங்களை முறையாக சேகரித்து மறு சுழற்சியில் காகிதம் தயாரிக்க வேண்டும்.சுற்றுச்சூழலின் நண்பனான, மக்கும் தன்மையுடைய, மறு சுழற்சிக்கு உகந்த காகித்தை பயன்பாட்டிற்கு பெருக்குவோம். கல்வியை வளர்ப்போம்.சிந்திக்க நேரம் ஒதுக்குங்கள் - அதுஆக்கப்பூர்வமான சக்திவிளையாட நேரம் ஒதுக்குங்கள் - அதுஇளமைக்கான ரகசியம்படிக்க நேரம் ஒதுக்குங்கள் - அதுஅறிவுக்கான ஊற்றுஎழுத நேரம் ஒதுக்குங்கள்-அதுமுன்னேற்றத்திற்கான பாதைநிறைய படிப்போம் நிறைய எழுதுவோம்வெற்றி பெறுவோம்.---ஆர்.சுந்தர்துணைத் தலைவர் அகில இந்திய காகித வணிகர் சங்கம், சிவகாசி.98430 99215.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X