'கைது செய்ய தயாரா': அமித் ஷா சவால் Dinamalar
பதிவு செய்த நாள் :
கைது செய்ய,தயாரா,அமித் ஷா,சவால்,மம்தா

புதுடில்லி : மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவில் பேரணி நடத்த, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு, அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, தடையை மீறி, கோல்கட்டா செல்லப் போவதாக, அமித் ஷா அறிவித்துள்ளார். ''என்னை கைது செய்யத் தயாரா,'' என, மேற்கு வங்க அரசுக்கு, அமித் ஷா சவால் விடுத்துள்ளார்.

வட கிழக்கு மாநிலமான, அசாமில், என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பட்டியல் இறுதி வரைவு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இடம் பெறாத, 40 லட்சம் பேரை, நாட்டை விட்டு வெளியேற்ற, சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. இதற்கு, மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்தார்.

சலசலப்பு :


பா.ஜ.,வுடன், ஏற்கனவே மோதல் போக்கை பின்பற்றி வரும் மம்தா, என்.ஆர்.சி., விவகாரத்திலும் ஆவேசமாக கருத்து தெரிவித்தது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில், பா.ஜ.,வை பலப்படுத்தும்

நடவடிக்கைகளை, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா எடுத்து வருகிறார்.

மேற்கு வங்கத்தில், அதிகமான தொகுதிகளில், பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில், அவர் தீவிரம் காட்டி வருகிறார். இதையொட்டி, வரும், 11ல், கோல்கட்டாவில் பிரமாண்ட பேரணி நடத்த, அவர் திட்டமிட்டு உள்ளார்.

அதிருப்தி :


ஆனால், அந்த பேரணிக்கு, கோல்கட்டா நகர போலீசார் அனுமதி மறுத்ததாக தகவல் வெளியானது. தடையை மீறி பேரணி நடத்தினால், அமித் ஷாவை கைது செய்யவும், மேற்கு வங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. மேற்கு வங்க அரசின் இந்த நடவடிக்கை, பா.ஜ.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக, டில்லியில் நேற்று அமித் ஷா கூறியதாவது:

திட்டமிட்டபடி, கோல்கட்டாவில் பேரணியை நடத்தியே தீருவோம். பேரணி நடத்தச் சென்றால், மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, என்னை கைது செய்வதாகக் கூறியுள்ளது. இந்த விஷயத்தில், அவர்களுக்கு சவால் விடுக்கிறேன். முடிந்தால், என்னை கைது செய்யட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமித் ஷாவின் சவால் குறித்து, மம்தா பானர்ஜியிடம், நிருபர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அப்போது, ''மேற்கு வங்கத்தில் எங்கு வேண்டுமானாலும், அமித் ஷா செல்லட்டும்; அவரை யாரும் தடுக்கப் போவதில்லை,'' என்றார்.

கடந்த, 2014 நவம்பரில், கோல்கட்டாவில், பா.ஜ., பேரணி நடத்த, மாநகராட்சி அனுமதி மறுத்தது. இது தொடர்பாக, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், பா.ஜ., வழக்கு தொடர்ந்து, அனுமதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., இரண்டு இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பா.ஜ., தலைவர்களின் இடைவிடாத முயற்சிகளால், இடதுசாரி கட்சிகளை பின்னுக்கு தள்ளி, பா.ஜ., முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்து உள்ளது.

'பிரதமர் பதவிக்கு ஆசையில்லை' :

மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் நடவடிக்கைகளில், திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான, மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக, தலைநகர் டில்லி வந்துள்ள மம்தா, காங்., தெலுங்கு தேசம், தி.மு.க., சமாஜ்வாதி, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். இந்த கட்சிகளின் தலைவர்களுக்கு, கோல்கட்டாவில், அடுத்தாண்டு ஜனவரியில் நடக்கவுள்ள திரிணமுல் பேரணியில் பங்கேற்க வரும் படி, மம்தா அழைப்பு விடுத்தார். பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா நேற்று சந்தித்து பேசினார். காங்., தலைவர்கள் ராகுல், சோனியா ஆகியோரையும் சந்தித்தார். பின், நிருபர்களிடம் பேசிய மம்தா, ''பிரதமர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. பிரதமர் பதவி யாருக்கு என்பதை, அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றாக அமர்ந்து தீர்மானிக்க வேண்டும்,'' என்றார்.



Advertisement

வாசகர் கருத்து (94)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
02-ஆக-201820:49:05 IST Report Abuse

r.sundaramமம்தா திதிக்கு யாருடனும் சுகுமுகமாக போகத்தெரியாது. எப்போதும் யாருடனும் சிடுசிடுப்புத்தான், அதனால்தானோ என்னவோ கல்யாணமே பண்ணிக்கொள்ள வில்லை. நேர்மையானவர் என்றார்கள், அதுவும் சீட் பண்டு விஷயத்தில் சீரழிந்தது. பேரணி நடத்தினால் என்ன, ஏன் இவர் பயப்படுகிறார்? அடுத்தமுறை பிஜேபி வந்துவிடும் என்ற பயமோ?

Rate this:
thennavan - chennai,இந்தியா
02-ஆக-201817:41:24 IST Report Abuse

thennavanதவறு செய்வேன் தடுத்து பார் என சவடால் விடும் இந்த இந்துத்வவாதியை பிடித்து போடும் வல்லமை மம்தாவிற்கு கண்டிப்பாக உண்டு

Rate this:
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
02-ஆக-201815:29:52 IST Report Abuse

Sheriவிஜய் மல்லையா கேட்டது போல் இவருக்கும் சிறப்பான முறையில் டாய்லெட் வசதி செய்து தரப்படும். TV வசதியும் உள்ளது என்பதை புரிந்து கொள்ளும். ஆனால் களி தான் திங்க வேண்டும். வாழ்க வளமுடன்

Rate this:
மேலும் 91 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X