எனக்கு எப்போதும் நேர்வழி : ஐஸ்வர்யா உறுதி| Dinamalar

எனக்கு எப்போதும் நேர்வழி : ஐஸ்வர்யா உறுதி

Added : ஆக 05, 2018
Advertisement
எனக்கு எப்போதும் நேர்வழி  : ஐஸ்வர்யா உறுதி

உன் கருங்கூந்தலில் சேர கார்மேகமும் காதல் கொள்ளும், மின்னல்கள் எட்டிப்பார்க்கும் காந்த கண் அசைவில், ரோஜா பூக்களின் இதழ்களால் செதுக்கியதோ உன் செவ்விதழ்கள், கார்குழல் முதல் காலடி வரை தேவதையின் பிம்பமோ இவள் என கேட்கும் இளசுகளின் இதயதுடிப்பு. உடை அழகா, இடை அழகா இல்லை; நடை அழகா என பார்வையாளர்களை திணறடித்து, புதிய புயலாய் மாடலிங் துறையில் தடம் பதித்து, சினிமா துறையில் இடம் பிடித்துள்ள ஐஸ்வர்யா, சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக மனதிறந்த நிமிடங்கள் இதோ...

* உங்களைப் பற்றிய அறிமுகம்
சொந்த ஊர் கோவை. தற்போது சென்னையில் பிசிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். பார்ட் டைம் ஆக மாடலிங் செய்கிறேன். சின்ன வயதில் இருந்தே மாடலிங் ஆசை உண்டு. கல்லூரியில் நடந்த ராம்ப் ஷோவில் பங்கேற்ற ஒரு டிசைனர் என்னுடைய பெர்பாமன்ஸ் பார்த்துவிட்டு மாடலிங்கிற்கு அழைத்து சென்றார்.

* நிறைய விருதுகள் வாங்கியுள்ளீர்களேகோவையில் நடந்த மிஸ் குயின் ஈவண்ட்சில், மிஸ் போட்டோஜெனிக் பேஸ் என்ற டைட்டில் பெற்றது மறக்க முடியாது. ஏனென்றால் பிறந்த மண்ணில் வாங்கிய விருது அல்லவா.

* மாடலிங் வருவோர்களுக்கு டிப்ஸ்...நேர் வழியில் சென்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். குறுக்கு வழியில் சென்றால் பணம் மட்டும் தான் சம்பாதிக்க முடியும். சாதிக்க முடியாது. சாதிக்கனும்னா திறமை தான் முக்கியம். எனக்கு எப்பவுமே நேர் வழி தான்.

* இத்துறையில் போட்டிகள் உண்டோ...நிறையவே இருக்கு. எல்லாத்துறையிலும் இருக்கிற மாதிரி தான் இங்கேயும். போட்டிகள் இருந்தால் தானே நாம ஜெயிக்கணும்கிற வெறி வரும்.

* மாடலிங் தவிர...குறுமக்படங்கள், ஆல்பம் பண்ணிட்டு இருக்கேன். அதன் வரிசையில் சினிமாவிலும் பெயரிடப்படாத ஒரு படத்தில் மெயின் ரோலில் நடித்து வருகிறேன்.

* குறும்படங்களுக்கு எப்படி வரவேற்பு...பாசிட்டிவ் கமெண்ட்ஸ் எவ்வளவு வருதோ, அதே அளவிற்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும். பாசிட்டிவ் கமெண்ட்ஸ் மட்டும் நாம் எடுத்துக்கணும்.

* நிறைவேறாத ஆசை...என்னோட உயரம் 5.4 அடி. இன்னும் கொஞ்சம் வளர்ந்து இருக்கலாம்ன்னு அடிக்கடி நினைப்பேன்.

* கிளாமர் அதிகம் சினிமாவிலா? மாடலிங்கிலா?சினிமாவில் கொஞ்சமாவது கிளாமரா இருந்தால் தான் அங்கு நடிக்க மட்டும் இல்லை; ஜெயிக்கவும் முடியும். ஹோம்லியாகவும் நடிக்கலாம். அது போன்ற வாய்ப்புக்கள் அமைவது ரொம்ப அரிது.

* அரசியல் ஆர்வம்...வேண்டவே வேண்டாம்பா இந்த அரசியல். நமக்கு லட்சியத்தை எட்டுவது மட்டுமே ஒரே நோக்கம்.

* எதிர் கால லட்சியம்...சிறந்த நடிகை என்ற பெயர் எடுத்தால் போதும்.
வாழ்த்த aishubaby0108@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X