மணநாளன்று மறியல் செய்த கருணாநிதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மணநாளன்று மறியல் செய்த கருணாநிதி

Added : ஆக 08, 2018 | கருத்துகள் (25)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
D.M.K,karunanidhi,கருணாநிதி,தி.மு.க

கடந்த 1948 செப்., 15ல் தயாளுவை மணமுடிக்க வேண்டிய மணநாளன்று காலை பந்தல் முகப்பில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்த இவர் இந்தியை எதிர்த்து அந்த வழியே மறியலுக்காக ஒரு ஊர்வலம் செல்லவே மணப்பந்தலில் இருந்து காணாமல் போனார். மணமேடையில் இருக்க வேண்டியவரை காணவில்லை என்றதும் உறவினர்கள் ஊர் முழுவதும் இவரை தேடினர். பள்ளி எதிரே நடந்து கொண்டிருந்த மறியல் கூட்டத்தில் இவரும் நின்றுகொண்டு கோஷம் போட்டுக் கொண்டிருந்ததை கண்டனர். மறியல் முடிந்த பிறகே இவர் மணமேடைக்கு வந்தார்.


சாக்லெட்டைக் காட்டி..


அண்ணாதுரையின் அறிவுரையையும் மீறி 'முரசொலி'யில் சேரன் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த இவர் சிறுவர் சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த போது சாக்லெட்டை காட்டி கூட்டம் சேர்க்க வேண்டியதாயிற்று. இந்த சங்கத்தின் சார்பில் வாரம்தோறும் கூட்டம் நடைபெறும். கூட்டத்திற்கு மக்கள் வரவேண்டும். அதற்காக கூட்ட முடிவில் 'சாக்லெட் வழங்கப்படும்' என்று முன்னதாகவே அறிவிக்கப்படும்.


திரு.பதினொரு லட்சம் :

1967ல் திமுக வேட்பாளர்களின் பட்டியலை அண்ணாதுரை வெளியிட்டபோது சைதாப் பேட்டை வேட்பாளர் என்று வாசித்துவிட்டு சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பெயரை அறிவிக்காமல் 'திரு பதினோறு லட்சம்' (கருணாநிதி தேர்தல் நிதியாக 11 லட்சம் திரட்டித் தந்ததை நினைவூட்டும் வகையில்) என்று அவருக்கே உரிய குறும்புப் பார்வையுடன் பார்வையாளர்களை பார்க்க கைதட்டல் விண்ணை பிளந்தது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
17-ஆக-201817:14:36 IST Report Abuse
ganapati sb சொற்பொழிவார் அண்ணாதுரை என உள்ளதே அப்படியானால் மறியலில் அண்ணாத்துரையும் பங்கு பெற்றாரா
Rate this:
Share this comment
Cancel
Jack Roberts - Chennai,இந்தியா
16-ஆக-201800:30:02 IST Report Abuse
Jack Roberts எத்தனாவது கல்யாணத்தன்னிக்கு?
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-ஆக-201813:06:56 IST Report Abuse
Malick Raja கருணாநிதி என்று கேட்டவுடனே வெகு சிலருக்கு எரிவு வந்து விடுவது இயல்பு என்பதை மறுக்க முடியாது .. முதலில் தேவதாசி முறையை ஒழித்தார் .. இந்திக்கு பாடை காட்டினார் ..சமுதாயத்தில் ஏற்ற தாழ்வு இல்லாமல் நடத்த தனது குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் கலப்பு மனம் செய்தார் ..பொட்டுக்கட்டி கும்மாளம் அடித்த கொடியவர்கள் கூடாரத்தை கோவிலாக மாற்றினார் .. சமுதாய தொண்டுகள் மனிதர்களால் மட்டுமே பாராட்டப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X