அழைத்தால் வரும் ஓட்டுனரில்லா வாடகை வண்டி!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

அழைத்தால் வரும் ஓட்டுனரில்லா வாடகை வண்டி!

Added : ஆக 09, 2018
Advertisement
அழைத்தால் வரும் ஓட்டுனரில்லா வாடகை வண்டி!

நகர்புற பயணியர், பொதுப் பேருந்து அல்லது ரயில் நிலையங்களுக்கு வரவும், திரும்பச் செல்லவும் தாமதம் ஆகிறது. இதை, 'முதல் காத துாரம்' மற்றும் 'கடைசி காத துாரம்' சவால்கள் என்கின்றனர் போக்குவரத்து வல்லுனர்கள்.
இரு சவால்களையும் போக்க, கூகுளின் தானோட்டி வாகனப் பிரிவான, 'வேமோ'. புதிய தீர்வை வெள்ளோட்டம் பார்க்கத் தொடங்கி உள்ளது.
அமெரிக்காவிலுள்ள பீனிக்ஸ் நகரின் ரயில் நிலையங்களுக்கு வருவோரின் முதல் மற்றும் கடைசி காத துாரங்களுக்கு, வேமோவின், தானோட்டி வாகனங்களை பயன்படுத்த அனுமதி பெற்று உள்ளது கூகுள்.
முதற்கட்டமாக, ரயில் நிலைய பணியாளர்கள் வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு வரவும், அங்கிருந்து வீட்டுக்குச் செல்லவும் வேமோ தானோட்டி வாகனங்களை தங்கள் மொபைல் மூலம் அழைத்து ஏறி பயணிக்கலாம்.
'உபேர்' போன்ற சேவைதான் இது என்றாலும், வந்து நிற்கும் வேமோ வண்டியில் ஓட்டுனர் இருக்கமாட்டார். வேமோவின் உயர்தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவு மென்பொருளுமே வாகனத்தை ஓட்டிச் செல்லும்.
வெள்ளோட்டத்தில் வெளிப்படும் குறைகளை களைந்த பிறகு, பீனிக்ஸ் நகரத்தில் வேமோவின் தானோட்டி வாடகை கார் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X