குற்றவாளிகள் அரசியலில் இருக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட் கருத்து Dinamalar
பதிவு செய்த நாள் :
குற்றவாளிகள் அரசியலில் இருக்கக்கூடாது
சுப்ரீம் கோர்ட் கருத்து

புதுடில்லி : 'அரசியலில் கிரிமினல்கள் இருக்கக் கூடாது; அதே சமயம், பார்லிமென்ட் அதிகாரத்தை பறிக்கும் வகையில், நீதிமன்றம் ஒருபோதும் செயல்படாது' என, உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்


கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கவும், கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க கோரியும், உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசியலில் உள்ள பெரும்பாலானோர், கிரிமினல் குற்ற வழக்குகளை சந்தித்து வருகின்றனர். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில், 34 சதவீதம் பேர், கிரிமினல் குற்றப் பின்னணி உடையவர்களே.

கிரிமினல் குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள நபர்கள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அதே போல், கொடும் குற்றங்கள் புரிந்த வழக்கில், குற்றச்சாட்டுக்கு ஆளான மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும். அரசியலில், கிரிமினல்கள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்து வரும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா

Advertisement

தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு கூறியதாவது: அரசியலில் குற்றப் பின்னணி இருக்கக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. எனினும், நீதிமன்றத்திற்கு என ஒரு எல்லை உள்ளது. நாங்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் அல்ல. பார்லிமென்டுக்குரிய அதிகாரத்தை மீறும் வகையில், நீதிமன்றம் ஒருபோதும் செயல்படக் கூடாது. இவ்வாறு அந்த அமர்வு கூறியது.


Advertisement

வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-ஆக-201814:57:17 IST Report Abuse

a.thirumalaiஇந்த நாட்டை வைத்து காமெடி கீமெடி பண்ணலேயே

Rate this:
Rajaai - Madurai,இந்தியா
10-ஆக-201814:12:24 IST Report Abuse

Rajaaiஆக மொத்தம், அரசியல்வாதிகளே இருக்கக்கூடாதுங்குறீங்க.

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-ஆக-201812:55:47 IST Report Abuse

Nallavan Nallavanஜனநாயகத்தின் ஒரு தூணாக நீதித்துறையைச் சொல்வார்கள் ..... குற்றவாளிகளை நிறுத்தாதீங்க .... ஆனா உங்களுக்கு அதைச் சட்டபூர்வமாகச் செய்யத் தடையில்லை -ன்னு சொல்ல எதுக்கு கோர்ட்டு ????

Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X