அரசியல் கட்சிகளின் வருமானம்; ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
அரசியல் கட்சிகளின் வருமானம்
ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

புதுடில்லி : மாநில கட்சிகள், 2016 - 17ம் நிதியாண்டில் பெற்ற மொத்த வருமானத்தில், 22 சதவீதம், அடையாளம் தெரியாத வகையில் பெறப்பட்டுள்ளதாக, ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி,வருமானம்,ஆய்வறிக்கை,அதிர்ச்சி,தகவல்



ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் சார்பில், நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெற்ற, 37 மாநில கட்சிகளின் வருமான வரி கணக்கு தாக்கல் விபரம், அவர்களின் சொத்து கணக்கு விபரங்களின் அடிப்படையில், ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது.


அதில், 29 கட்சிகளின் சொத்துகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. மீதமுள்ள, எட்டு கட்சிகளின் வருமானம், சொத்து விபரங்கள் கிடைக்கவில்லை. அந்த வகையில், 2016 - 17ம் நிதியாண்டில், 29 மாநில கட்சிகளின் மொத்த வருவாய், 347.74 கோடியாக உள்ளது.


அதில், சொத்து விற்பனை, உறுப்பினர் கட்டணம், வங்கி, 'டிபாசிட்' வட்டி வருமானம், புத்தக விற்பனை உள்ளிட்ட வகையில், 179.37 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. இது, மொத்த வருமானத்தில், 51.58 சதவீதம்.


சிவசேனா, அகாலி தளம், சமாஜ்வாதி, எம்.என்.எஸ்., ராஷ்ட்ரீய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள், தங்கள் வருமானத்தில், 83 சதவீத தொகையை, கார்ப்பரேட்டுகள், தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றதாக தெரிவித்துள்ளன.

Advertisement

மேலும், 16 மாநில கட்சிகள், தங்கள் மொத்த வருமானத்தில், 83 சதவீதத்தை, கட்சி உறுப்பினர்களி டம் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளன.


மாநில கட்சிகளின் மொத்த வருமானத்தில், 22 சதவீத தொகை, அதாவது, 77 கோடி ரூபாய், அடையாளம் தெரியாத வகையில் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
10-ஆக-201816:27:50 IST Report Abuse

Enrum anbudanநாற்பது சதவிகிதத்தில் இருபது சதவிகிதம் கட்சிக்கு

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
10-ஆக-201816:21:34 IST Report Abuse

Loganathan Kuttuvaவருமானம் காட்டப்பட்ட பணம் கணக்கில் உள்ள பணம். தேர்தலில் முறைகேடாக செலவழிக்க கணக்கில் உள்ள பணத்தை உபயோகிக்க முடியாது. கருப்பு பணம் தான் வேண்டும்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-ஆக-201814:50:26 IST Report Abuse

Pugazh Vதேசிய அளவில் அதிகமான வசூல் அல்லது வருமானம் அல்லது இங்கே ஒருத்தர் சொல்லியிருக்கிற மாதிரி கொள்ளை அடிச்சது பிஜேபி. மாநில அளவிலும் குடி பிஜேபி தான். அதனாலேயே, எந்த குறிப்பிட்ட கட்சி பேரும் போடாமல் எழுதியிருக்கிறார்கள்.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X