AAP Will Not Join Opposition Alliance for 2019 Lok Sabha Polls, Says Arvind Kejriwal | மெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால் பேட்டி| Dinamalar

மெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால் பேட்டி

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (23)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
மெகாகூட்டணியில் ஆம் ஆத்மி இணையுமா: கெஜ்ரிவால்  பேட்டி


புதுடில்லி: 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.அடுத்த லோக்சபா பொதுத்தேர்தலை ஓரிரு மாதங்களில் நாடு சந்திக்க உள்ளன. பா.ஜ., வுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. பா.ஜ.,- காங். அல்லாத மூன்றாவது அணிக்கும் முயற்சி நடந்து வருகிறது.இதில் ஆம் ஆத்மி கட்சியும் இணையலாம் என தகவல் வெளியாகின. இது குறித்து அரியானாவின் ரோக்டாக்கில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்கூறியது, டில்லியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்களை பிரதமர் மோடி அரசு முடக்கி வைத்துள்ளது. மக்களின் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசிடம் போராடிதான் பெறவேண்டியுள்ளது. 2019- லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது. வரப்போகும் அரியானா சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
10-ஆக-201816:22:12 IST Report Abuse
Siva இத்தனை நாள் புத்திசாலிகள் தான் வெளிநாடு போவார்கள் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.... நம்மூரில் பிச்சை காரன் செல்போன் வைத்திருப்பது போல. ஒட்டகம் மேய்ப்பவனும். ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறான் என்று தெரியவில்லை..
Rate this:
Share this comment
Cancel
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
10-ஆக-201816:05:57 IST Report Abuse
தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் இவர்கள் கூட்டணி அமைப்பது, பாஜக வை தப்பு தப்பாக விமர்சிப்பது, எல்லாம் சரி, சில வாரங்களுக்கு முன்பு குமாரசாமியின் பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த இந்த கூட்டத்தினர், கெஜ்ரி, அகிலேஷ் நம்ம மய்யம் நாயகன் சந்திரபாபு இவர்கள் எல்லோரும் பெங்களூரு வில் சொகுசு ஹோட்டலில் தங்கி ஒருநாளைக்கு ஒன்றரை -இரண்டு லட்சம் செலவு செய்தார்களாமே, மது அருந்த மட்டும் ஒரு இரவிற்கு ஒரு லட்சம் வரை செலவாமே . அதுவும் மக்கள் பணத்தில் .. கர்நாடக அரசு பில் கட்டியிருக்கிறதே .. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டதே.. போயும் போயும் இந்த கெஜ்ரியை ஏதோ எளிமையான மனிதர் என்றெல்லாம் பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளினவே மீடியாக்களும், சமூக வலைதள போராளிகளும்.. அவர்கள் எல்லாம் இதைப்பற்றி மூச்சு கூட விடவில்லையே ..
Rate this:
Share this comment
Cancel
10-ஆக-201813:06:46 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நான்காவது அணியாக ஆப்பு கட்சி தனியான நின்று அனைத்து இடங்களையும் ஜெயிக்கும் , கெஜ்ரிவால் பிரதமராவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X