காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு| Dinamalar

காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு

Added : ஆக 10, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
காற்றில் இயங்கும் கார்; எகிப்தில் கண்டுபிடிப்பு

கெய்ரோ : காற்றில் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்து, எகிப்து மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

பெட்ரோல், டீசல், மின்சாரம் ஆகியவற்றில் இயங்கும் கார்களை பார்த்திருக்கிறோம். புதிய கண்டுபிடிப்பாக, காற்று மூலம்இயங்கும் காரை, வடிவமைத்து உலகின் பார்வையை தங்கள் பக்கம் திருப்பியுள்ளனர் எகிப்துமாணவர்கள்.

எகிப்தில் உள்ள ஹெல்வன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இளநிலை பட்டப்படிப்பு மாணவர்கள் சிலர், தங்களது புராஜக்ட்டில் ஒரு பகுதியாக இதனைவடிவமைத்துள்ளனர். இக்காரில் ஒரு நபர் பயணம் செய்யலாம். ஆக்சிஜன் மூலம் இயங்கும். மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் செல்லும். ஒருமுறை ஆக்சிஜன் நிரப்பினால் 30 கி.மீ., துாரம் வரை பயணம் செய்யலாம். இதன் தயாரிப்பு செலவு வெறும் ரூ. 68,500.

பொதுவாக வாகனங்கள் வாங்க நினைக்கும் பலரும், எரிபொருள் செலவை நினைத்து விட்டு, முடிவை மாற்றிக் கொள்வர். ஆனால் இந்த காரை பொறுத்தவரை அந்த கவலையே இல்லை. ஏனெனில் காற்றில் இயங்குவதால், எரிபொருள் செலவு மிச்சம். சாதாரணமாக 'கம்ப்ரஸ்டு ஆக்சிஜன் காற்றை' எரிபொருளுக்கு பயன்படுத்தினால் போதும். மாணவர்கள் குழு, தயாரிப்பை மேலும் அதிகரிப்பதற்கு, நிதியுதவியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.


இலக்கு '100' :

மேலும் தாங்கள் வடிவமைத்த காரை, மணிக்கு 100 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில்,மேம்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஆக-201811:20:54 IST Report Abuse
Bhaskaran கம்ப்ரெஸ்ஸரை ஒழுங்காக பராமரிக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Senthilkumar Dharmalingam - TRY,இந்தியா
10-ஆக-201810:23:17 IST Report Abuse
Senthilkumar Dharmalingam மின்சாரம் அல்லது எரிபொருள் இல்லாமல் எப்படி காற்றை அதிக அழுத்தத்தில் அடைப்பது. மின்சாரம் தேவையெனில் மின்சார வாகனத்தையே பயன்படுத்தலாமே?
Rate this:
Share this comment
Cancel
சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்
10-ஆக-201808:56:01 IST Report Abuse
சூரிய புத்திரன் . இந்த புதிய கண்டுபிடிப்பல்ல, பல வருடங்களாக செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு விசயம் தான். இதற்கு எரிபொருள் எதுவும் தேவையில்லை. இது இயங்கும் விதமானது காற்றை உயாிய அழத்தத்தில் அழுத்தி கொள்கலன்களில் அடைத்து அதை கட்டுபடுத்தி வெளியேற்றுவதன் மூலம் உந்தத்தை பெறலாம் அந்த உந்தத்தை பயன்படுத்தி எந்த பொருளையும் நகா்த்தலாம். உதாரணமாக பலூனில் அடைக்கப்பட்ட காற்றை வெளியாக்கும் போது அந்த பலூன் பறப்பதை பாா்க்கலாம் அதற்கு காரணம் உந்தம் (Thrust). பல நாடுகளில் அடைக்கப்பட்ட காற்றால் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பயன்பாட்டிலே உள்ளன. காற்றை அழுத்தி அடைக்க compressor தேவை அதற்கு மின்சாரமோ, எரிபொருளோ இல்லாமல் முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X